என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்4 April 2019 12:12 PM GMT (Updated: 4 April 2019 12:12 PM GMT)
வில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கோர்க்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோம்நாத் மாலிக். இவரது மகன் சரத் மாலிக் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு புதுவையில் தனியார் ரெக்சின் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே சரத்மாலிக் தனது வயதை விட 4 வயது அதிகம் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்யவும் முடிவு செய்தார். தனது விருப்பத்தை சரத்மாலிக் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும், சரத்மாலிக் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் பிடி வாதமாக இருந்தார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தனது வார்த்தையை மீறி அந்த பெண்ணை திருமணம் செய்தால் வீட்டில் இருக்க வேண்டாம் என சரத் மாலிக்கை அவரது தந்தை சோம்நாத் மாலிக் எச்சரித்தார்.
இதனால் மனமுடைந்த சரத்மாலிக் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) எடுத்து தின்று விட்டார்.இதில் மயங்கி விழுந்த சரத்மாலிக்கை அவரது பெற்றோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சரத்மாலிக் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோர்க்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

Next Story
×