search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ரத்து இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்
    X

    புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ரத்து இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என்றும் ரத்தாக வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterSengottaiyan
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும். ரத்தாக வாய்ப்பு இல்லை.


    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 84 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு பரிசீலனை செய்தால் அதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ளும்.


    டெல்டா மாவட்டங்களில் முழுமையான பாதிப்புள்ளாகிய மாணவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கலாம் என முதல்- அமைச்சரிடம் ஆலோசித்து பின்னர் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterSengottaiyan
    Next Story
    ×