என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து - தொழிலாளி உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்13 Oct 2018 4:48 PM GMT (Updated: 13 Oct 2018 4:48 PM GMT)
திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர். இருவர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு டவுன் செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது33). கட்டிட தொழிலாளி. இவரது நண்பர் செல்வம். இருவரும் மோட்டார் சைக்கிளில் செங்கோடம்பாளையம் வேலாத்தாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கொல்லம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (19), இவரது நண்பர் பிரவீன் ஆகிய 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மேலும் மோதியதோடு நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த மினி லாரி மீது மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் உயிருக்கு போராடினர். இதைத்தொடர்ந்து அக்கம்-பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி கண்ணன், விக்னேஷ் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பிரவீன், செல்வம் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
×