என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக, திமுக.வை தமிழக அரசியலில் இருந்து அகற்றுவோம் - கமல்ஹாசன்
Byமாலை மலர்12 Oct 2018 9:24 PM GMT (Updated: 12 Oct 2018 9:24 PM GMT)
தமிழக அரசியலில் இருந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை அகற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
சேலம் :
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாற்றி வருகிறார்.
கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாற்றி வருகிறார்.
இதில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசுகையில், ‘மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்து கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை. சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் மூலம் அங்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையக் கூடிய வாய்ப்பு உண்டு. அதனால் அந்த கூட்டணி உடையும் பட்சத்தில் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும். மேலும் அதிமுக மற்றும் திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும். திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது’ என்று அவர் கூறினார்.

Next Story
×