search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே சாலை தடுப்பு சுவரில் மினி பஸ் மோதி கவிழ்ந்தது- 19 பக்தர்கள் படுகாயம்
    X

    சேலம் அருகே சாலை தடுப்பு சுவரில் மினி பஸ் மோதி கவிழ்ந்தது- 19 பக்தர்கள் படுகாயம்

    மினி பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மகுடஞ்சாவடி:

    திருவண்ணாமலையில் இருந்து பக்தர்கள் 27 பேர் நேற்று இரவு ஒரு மினி பஸ்சில் புறப்பட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடி சந்தை அருகே மெயின் ரோட்டில் பஸ் வந்தபோது திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி, கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 46), சீனிவாசன் (35) மற்றும் இவரது மனைவி புஷ்பம்(28), விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த அங்கமுத்து (55) உள்பட 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள், பஸ்சுக்குள் சிக்கிய அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 19 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மினி பஸ்சை மோதியிருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×