search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் இருந்து தவறி விழுந்த சுமை தூக்கும் தொழிலாளி பலி
    X

    ரெயிலில் இருந்து தவறி விழுந்த சுமை தூக்கும் தொழிலாளி பலி

    ரெயிலில் இருந்து தவறி விழுந்த சுமை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    பரமக்குடி:

    மதுரை பாரதி நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 38). இவர் மதுரை ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பால்பாண்டி தனது நண்பருடன் நேற்று ராமேசுவரத்துக்கு பயணிகள் ரெயிலில் புறப்பட்டார்.

    மதியம் 12.30 மணி அளவில் பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றது. மீண்டும் புறப்பட்டபோது பால்பாண்டி எதிர்பாரத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்து விட்டார்.

    அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கினார். பின்னர் பரமக்குடி வந்து ரெயில் நிலைய மேலாளரிடம் தகவல் தெரிவித்தார். புகார் கூறியவர் போதையில் இருந்ததால் நிலைய அதிகாரி அதனை கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில் தண்டவாளத்தில் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொது மக்கள் ரெயில்வே உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் ராமேசுவரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பால்பாண்டியை மாலை 5.30 மணி அளவில் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்லும் வழியிலேயே பால்பாண்டி பரிதாபமாக இறந்தார். ரெயிலில் இருந்து தவறி விழுந்த சிறிது நேரத்திலேயே பால் பாண்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். #accidentcase

    Next Story
    ×