search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம்-சென்னை சாலை திட்டம் தமிழக வளர்ச்சிக்கு முக்கியம்: தமிமுன் அன்சாரி பேட்டி
    X

    சேலம்-சென்னை சாலை திட்டம் தமிழக வளர்ச்சிக்கு முக்கியம்: தமிமுன் அன்சாரி பேட்டி

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் தமிழக வளர்ச்சிக்கு முக்கியமானது என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தெரிவித்தார். #thamimunansari #SalemChennairoadproject

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    போடி அருகே அம்பரப்பர் மலையை குடைந்து அமைய உள்ள நியூட்ரினோ திட்டம் இந்த மாவட்ட மக்களை பீதியடையை வைத்துள்ளது. எனவே இந்த திட்டத்தை நாங்கள் எதிர்த்து வருகிறோம். திண்டுக்கல் - லோயர் கேம்ப் அகல ரெயில் பாதை திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதால் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளபோது அரசுக்கு போட்டியாக ஆளுநர் மாவட்டம் தோறும் ஆய்வுகள் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல்மட்டுமின்றி மாநிலங்களுக்கான அதிகாரங்களை கேலி செய்வது போன்றதாகும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். விமான நிலையங்கள், சாலைகள் போன்றவை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.

    எனவே நாட்டின் நலனை கருத்தில் கொண்டு சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதே வேளையில் விவசாயிகளை தவிக்க விட்டு திட்டங்களை செயல்படுத்துவது விரும்பத்தகாத ஒன்று. எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின்னரே பணிகளை தொடங்க வேண்டும்.


    புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் தேசிய அளவில் கவனம் பெறுவதற்காகவே பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ராகுல்காந்தி, சோனியா காந்தி சந்திப்பும் அதுபோல்தான் நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #thamimunansari #SalemChennairoadproject

    Next Story
    ×