search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சம்பவங்களில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்- முதலமைச்சர் பழனிசாமி
    X

    பல்வேறு சம்பவங்களில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்- முதலமைச்சர் பழனிசாமி

    பல்வேறு சம்பவங்களில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறியதாவது:-

    திருவையாறு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த முருகன், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

    புவனகிரியை அடுத்த சு. கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் மகாலட்சுமி பள்ளி கழிவறையில் மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டி அள்ளிதரப்பு குக்கல் மலை கிராமத்தில் இடி தாக்கி இறந்த வித்யா குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், பெரம்பலூர் மாவட்டம் மாவலிங்கை கிராமத்தில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த பூபதி, பாரதி ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், ஈரோடு மாவட்டம் நல்லூர் கிராமத்தில் ஏரியில் மூழ்கி இறந்த ராஜ்குமார், கவுதம், சஞ்சய் ஆகிய 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி பலியான குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ், அருமனை கிராமத்தைச் சேர்ந்த அகஸ்டின், ஆறுதேசம் கிராமத்தைச் சேர்ந்த பாலையன் மற்றும் மின்சாரம் தாக்கி பலியான திற்பரப்பு கிராமத்தைச் சேர்ந்த நெல்லையப்பன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் தெற்கு கிராமத்தில் வாகன விபத்தில் பலியான செல்வராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், திருவையாறு வரகூர் கிராமத்தில் தீ விபத்தில் பலியான கீர்த்தி குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், புதுக்கோட்டை அனவயல் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பலியான தமிழ்செல்வன் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், பொன்னேரியை அடுத்த அமூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பலியான கன்னியப்பன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும் நிவாரணை நிதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #TNCM #Edappadipalanisamy
    Next Story
    ×