search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
    X

    போடி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

    போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 160 கிலோ ரேசன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மலைச்சாலை வழியாக அதிக அளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.

    போடி முந்தல் சோதனைச் சாவடியில் தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் மருதுபாண்டி, வருவாய் ஆய்வாளர் ராமர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது போடியில் இருந்து மூணாறு நோக்கி சென்ற அரசு பஸ்சில் சோதனை நடத்தினர்.

    பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் 3 பைகளில் ரேசன் அரிசி இருந்தது. ஆனால் அதற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து 3 பைகளில் இருந்த 160 கிலோ ரேசன் அரசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×