என் மலர்

  செய்திகள்

  கும்பகோணம் ஓட்டலில் வேலை பார்த்த வாலிபர் மாயம்
  X

  கும்பகோணம் ஓட்டலில் வேலை பார்த்த வாலிபர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணம் ஓட்டலில் வேலை பார்த்த வாலிபர் மாயமனார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்காழிபுரத்தைச் சேரந்தவர் தமிழ்வாணன். விவசாயி. இவரது மகன் பிரவின் ஆலிஸ் (வயது 22). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.

  இவர் கடந்த 26-ந் தேதி சொந்த ஊருக்கு வந்துவிட்டு ஹோட்டலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் பிரவின் ஆலிஸ் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

  இதுபற்றி குடவாசல் போலீசில் தமிழ்வாணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து மாயமான பிரவின் ஆலிஸை தேடி வருகிறார்.

  Next Story
  ×