search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன் அறிவிப்பில்லாத மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்- இந்திய கம்யூனிஸ்டு அறிவிப்பு
    X

    முன் அறிவிப்பில்லாத மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்- இந்திய கம்யூனிஸ்டு அறிவிப்பு

    திருச்சிற்றம்பலத்தில் 17-ந்தேதி முன் அறிவிப்பில்லாத மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.

    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிக்கு நரியங்காடு துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் மின்சாரம் இரவு பகல் எந்த நேரத்திலும் முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி தடை செய்யப்படுகிறது. இதனால், விவசாயம் , வியாபாரம், சிறுதொழில்கள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, திருச்சிற்றம்பலம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    திடீர் மின் வெட்டு இல்லாமல், மும்முனை மின்சாரத்தை நாளொன்றுக்கு 16 மணி நேரம் வழங்க கோரியும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்பகோரியும், நரியங்காடு 33 கிலோவாட் துணைமின் நிலையத்தை 110 கிலோவாட் திறன் கொண்டதாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ந்தேதி காலை 10மணிக்கு திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திருச்சிற்றம்பலம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருச்சிற்றம்பலம் கிளை செயலாளர் சதீஸ்குமார் தலைமை வகிக்கிறார். முன்ளாள் வட்டாரச் செயலாளர் கவிஞர் செல்வகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    Next Story
    ×