என் மலர்

  செய்திகள்

  கும்பகோணம் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
  X

  கும்பகோணம் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணம் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கும்பகோணம்:

  கும்பகோணம் அருகே உடையாளூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் ரமேஷ் (வயது37).

  இவர் நேற்று திருமலை ராஜன் ஆற்று பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மேல கொற்கை பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி பகுதியைச் சேரந்த தனசேகர் (35), ரமேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டுள்ளார். ரமேஷ் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு ரமேஷை மிரட்டி பணத்தை பறித்துள்ளார்.

  இதுகுறித்து ரமேஷ் கும்பகோணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர்.

  ஏற்கனவே தனசேகர் மீது கும்பகோணம் மற்றும் திருச்சியில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×