என் மலர்

  செய்திகள்

  திருத்துறைப்பூண்டி அருகே பனை மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி
  X

  திருத்துறைப்பூண்டி அருகே பனை மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பனை மரத்தில் லாரி மோதி டிரைவர் பலியான சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  திருத்துறைப்பூண்டி:

  அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமிண்ட்லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நாகை மாவட்டம் வேதாரண்யம் நோக்கி சென்றது. அந்த லாரி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மரப்புரம் பகுதியில் சென்றது அப்போது தூக்க கலக்கத்தில் டிரைவர் இருந்ததால் லாரி நிலை தடுமாறி சாலையோரம் நின்ற ஒரு பனைமரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இந்த வழியாக சென்ற பொதுமக்கள் லாரி மரத்தில் மோதி டிரைவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று லாரியில் உடல் நசுங்கி பலியாகி கிடந்த டிரைவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  டிரைவரின் லைசென்சை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்ததில் பலியான வாலிபர் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் குமனல்துறையை சேர்ந்த கலையரசன் மகன் கலைச்செல்வம் (வயது 26) என்று தெரியவந்தது.

  பனை மரத்தில் லாரி மோதி டிரைவர் பலியான சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×