என் மலர்

  செய்திகள்

  காயல்பட்டினத்தில் தொழிலாளி மீது தாக்குதல்- 5 பேர் மீது வழக்கு
  X

  காயல்பட்டினத்தில் தொழிலாளி மீது தாக்குதல்- 5 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
  ஆறுமுகநேரி:

  காயல்பட்டினம் சீதக்காதிநகரை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது23). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் ரத்னாபுரியில் உள்ள தனது நண்பர் ராஜசேகர் வீட்டிற்கு சென்றிருந்தார். 

  இதையடுத்து அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதை சதாம் உசேன் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் சதாம் உசேனை தாக்கி அவரது காதை அறுத்தனர். 

   இதில் காயமடைந்தவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் போலீசார் காயல்பட்டிணத்தை சேர்ந்த இஸ்மாயில், மைதீன், பாரீஸ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×