search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார் கவுன்சில் தேர்தலில் வக்கீல்கள் வாக்குப்பதிபு
    X

    பார் கவுன்சில் தேர்தலில் வக்கீல்கள் வாக்குப்பதிபு

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் வக்கீல்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். #BarCouncilPoll
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் வக்கீல்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 192 வக்கீல்கள் போட்டியிடுகிறார்கள்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1 லட்சம் வக்கீல்கள் இருந்தாலும் 5 வருடம் அனுபவம் (பிராக்டிஸ்) உள்ள வக்கீல்கள் தான் இந்த தேர்தலில் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 56,675 வக்கீல்கள் ஓட்டு போட தகுதியானவர்களாக உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்டுகளில் 160 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ஐகோர்ட்டு, ஜார்ஜ்டவுன், எழும்பூர், சைதாப்பேட்டை கோர்டுகளில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐகோர்ட்டில் மட்டும் 20 வாக்குசாவடி மையங்கள் உள்ளன.

    இன்று காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் இந்த தேர்தலில் 100-ம் நம்பரில் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    இதே போல் தேர்தலில் நிற்கும் 192 பேர்களும் காலையிலேயே அவரவருக்குரிய வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகளை சென்னைக்கு கொண்டு வந்து மாவட்ட வாரியாக எண்ண உள்ளனர். 1 வாரத்தில் இந்த பணி முடிந்ததும் 15 நாட்களில் யார்-யார் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரம் தெரிய வரும்.

    2 ஆயிரம் ஓட்டு யார் வாங்கி இருக்கிறார்களோ அவர்கள் பார் கவுன்சில் உறுப்பினராகி விட முடியும். மொத்தம் 25 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த பிறகு இவர்களில் பார் கவுன்சில் தலைவர், துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும். இதனால் பொதுத்தேர்தலை மிஞ்சும் அளவுக்கு ‘பார்’ கவுன்சில் தேர்தலில் பரபரப்பு காணப்படுகிறது.

    ஓட்டு போடும் வக்கீல்களை கவருவதற்காக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பணம்-பரிசு பொருட்களும் விளையாடுகின்றன. #BarCouncilPoll
    Next Story
    ×