என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்தி சிதம்பரம் கைது - வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்1 March 2018 5:42 AM GMT (Updated: 1 March 2018 5:42 AM GMT)
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒருநாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்கும்படி சி.பி.ஐ. தரப்பில் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews

Next Story
×