search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
    X

    இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

    இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டிடிவி தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக தகவல் வெளியானதால், ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானதும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அம்மா அணிக்கும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணிக்கும் போட்டி ஏற்பட்டது.

    இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

    இதற்கிடையே பணப்பட்டுவாடாவால் இடைதேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளும் இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்தை அணுகினார்கள்.

    பிறகு அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரு அணியினரும் லட்சக்கணக்கில் ஆவணங்களைத் தயாரித்து தாக்கல் செய்தனர். அதன்பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணைந்தன. இதனால் இரட்டை இலைக்கான போட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியினருக்கும் இடையிலான போட்டியாக மாறியது.

    இரண்டு தரப்பினரும் நிறைய ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் கமி‌ஷன் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள்.



    இதற்கிடையே, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து, இரட்டை இலைச்சின்னம் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதற்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் ஆணையம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தினகரன் கூறியிருந்தார்.

    இதையடுத்து அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×