search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரளம் அருகே 10 நாட்களாக தூக்கில் தொங்கிய வாலிபர் பிணம்: போலீசார் விசாரணை
    X

    பேரளம் அருகே 10 நாட்களாக தூக்கில் தொங்கிய வாலிபர் பிணம்: போலீசார் விசாரணை

    பேரளம் அருகே தேக்கு மரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கிள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் ராஜேஷ் (வயது 21). ஜெசிபி டிரைவர்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஷ், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    இந்த நிலையில் பேரளம் பகுதியில் ஒரு தேக்கு மரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் பிணமாக தொங்குவதாக பேரளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். வாலிபர் உடல் அழுகி போய் இருந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியது காணாமல் போன ராஜேஷ் என தெரிய வந்தது. அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    ராஜேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று பேரளம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×