search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூரில் 94 மாநகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைப்பு
    X

    கொடுங்கையூரில் 94 மாநகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைப்பு

    கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் ரூ. 40 லட்சம் வரி பாக்கிக்காக 94 மாநகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
    பெரம்பூர்:

    கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு 94 கடைக்காரர்கள் முறையாக வாடகை செலுத்தவில்லை. லைசென்ஸ் புதுப்பிக்காமலும், சொத்துவரி உள்ளிட்ட வரிகள் செலுத்தாமலும் நிலுவை வைத்துள்ளனர். மொத்தம் ரூ. 40 லட்சம் வரிபாக்கி வைத்திருந்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி சார்பில் 94 கடைக்காரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. என்றாலும் வரி பாக்கி செலுத்தாததால் இன்று அதிகாரிகள் நேரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    மாநகராட்சி அதிகாரிகள் விஜயகுமார், சூரியபாலு, திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று கடைகளுக்கு சீல் வைத்தனர். சிலர் வரி செலுத்துவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.

    மேலும் இந்த வணிக வளாகம் அருகே அனுமதி பெறாமல் 20-க்கும்மேற்பட்ட கடைகள் செயல்படுவதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

    இதே போல் எம்.கே.பி. நகர் பாலத்துக்கு அடியில் ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனி செயல்பட்டு வந்தது. இதற்கு மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அந்தப்பகுதியில் ஆய்வு நடத்தச் சென்ற போது ரஞ்சித்குமார் கம்பெனியை மூடிவிட்டு சென்று விட்டார்.

    இதை அறிந்த அதிகாரிகள் பிளாஸ்டிக் கம்பெனிக்கு சீல் வைத்தனர்.

    அதிகாரிகள் சோதனை சீல் வைப்பு நடவடிக்கையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×