என் மலர்

  செய்திகள்

  மணல் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கரூரில் கட்டிட என்ஜினீயர்கள் ஆர்ப்பாட்டம்
  X

  மணல் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கரூரில் கட்டிட என்ஜினீயர்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணல் தட்டுப்பாட்டை நீக்கி முடங்கி கிடக்கும் கட்டுமான தொழிலை காப்பாற்ற கோரி அடையாள வேலைநிறுத்தத்துடன் கூடிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
  கரூர்:

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கரூர் மாவட்டம் சார்பில் கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மணல் தட்டுப்பாட்டை நீக்கி முடங்கி கிடக்கும் கட்டுமான தொழிலை காப்பாற்ற கோரி அடையாள வேலைநிறுத்தத்துடன் கூடிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ஆர்ப்பாட்டத்துக்கு என்ஜினீயர் ராம்சுவாமி தலைமை தாங்கினார். மாநில இணை பொருளாளர் கைலாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

  இதில் மாவட்ட தலைவர் வைரம் கருணாநிதி, செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன், பொருளாளர் பாலமுருகன், இணை செயலாளர் சந்திரசேகர், துணை செயலாளர் ரவிக்குமார் மற்றும் என்ஜினீயர்கள் செல்லமுத்து, ராமநாதன், ராமசாமி, நல்லுசாமி, சிவகுமார் உள்பட ஏராளமான என்ஜினீயர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

  ஆர்ப்பாட்டத்தின் போது மணலுக்கு மாற்றாக செயற்கை மண்ணை பயன்படுத்த ஆணையிட்டு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். கட்டுமானத்துறை அமைச்சகம் அமைத்து கட்டுமான பொருட்களின் அத்தியாவசிய விலை பட்டியலில் கொண்டு வந்து அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
  Next Story
  ×