என் மலர்

  செய்திகள்

  பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
  X

  பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  பொன்னேரி:

  பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தனி வட்டாட்சியர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.

  வருவாய்த்துறை அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு, காலி பணியிடம் நிரப்புதல் மற்றும் பயிற்சிகள் உரிய காலத்தில் கிடைத்திட உத்திரவாத படுத்திட வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையரின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஆதி திராவிட நலத்துறை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த், புகழேந்தி உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×