search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனிதா ராதாகிருஷ்ணன் முயற்சியால் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடை அகற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    அனிதா ராதாகிருஷ்ணன் முயற்சியால் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடை அகற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

    திருச்செந்தூரில் பொதுமக்களுக்கு இடையூராக இருந்த டாஸ்மாக் கடை, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முயற்சியால் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இங்கு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூராக மூன்று மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் இந்த கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

    மேலும் இந்த மாதம் 25-ந் தேதி திருச்செந்தூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் நெடுஞ்சாலைதுறை இணை இயக்குநர் முன்னிலையில் மதுபானக் கடையை நெடுஞ்சாலையில் இருந்து அளந்து பார்க்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி 500 மீட்டருக்குள் அதாவது 270மீட்டர் தூரத்தில் கடை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து நேற்று இந்த கடையை மாவட்ட மேலாளர் சௌந்திர பாண்டியன் மூட உத்திரவிட்டார். அந்த கடை நேற்று பூட்டப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சந்தோ‌ஷமடைந்தனர்.

    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முயற்சியால் மூடப்பட்டதால் பொது மக்கள், மற்றும் பக்தர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×