என் மலர்

  செய்திகள்

  ரூ.1.5 கோடி வெளிநாட்டு பணத்துடன் துபாய் செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது
  X

  ரூ.1.5 கோடி வெளிநாட்டு பணத்துடன் துபாய் செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சவுதி ரியால்களுடன் துபாய் செல்ல முயன்றவரை சென்னை விமான நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
  சென்னை:

  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை துபாய் புறப்பட்டு செல்லும் விமானத்தின் மூலம் ஒரு பயணி வெளிநாட்டு பணத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, விரைந்து செயலாற்றிய அதிகாரிகள், பயணிகள் அனைவரையும் வெகு துல்லியமாக பரிசோதித்தனர். அப்போது, தனது கைப்பெட்டியில் ஒருவர் மறைத்து கொண்டு வந்திருந்த சுமார் 1.48 கோடி ரூபாய் மதிப்பிலான சவுதி அரேபியா நாட்டு ரியால்களை கண்டுபிடித்தனர்.

  இதையடுத்து, சென்னையை சேர்ந்த அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×