search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் டோஸ் பூஸ்டர்   தடுப்பூசி போடப்பட்டுள்ளது
    X

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இது வரை 57 லட்சத்து 65 ஆயிரத்து 918 டோஸ் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 75 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தபபட்டுள்ளது.

    75 நாட்களுக்கு மட்டும் அரசு மையங்களில் இலவச மாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் ஆர்வத்துடன் பூஸ்டர் தடுப்பூசியை போட்டு வருகிறார்கள்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×