search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இந்தியாவில் பஜாஜ் பல்சர் கிளாசிக் 150 வெளியானது

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் கிளாசிக் 150 மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் கிளாசிக் 150 வேரியன்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய வேரியன்ட் 2018 பல்சர் 150 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    எனினும் கிளாசிக் மாடலில் வழக்கமான 2018 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் வழங்கப்படவில்லை. அந்த வகையில் பாடி கிராஃபிக்ஸ், ரியர் டிஸ்க் பிரேக், ஸ்ப்லிட் சீட் மற்றும் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் பல்சர் கிளாசிக் 150 மாடலில் வழங்கப்படவில்லை.  

    கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் கிளாசிக் 150 மாடலின் தோற்றம் பார்க்க முதல் தலைமுறை பல்சர் போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் மாடல் குறித்த விவரங்கள் அந்நிறுவன வலைத்தளத்தில் மேம்படுத்தவில்லை. 



    எனினும் இன்னும் ஒருவாரத்திற்குள் விற்பனையாளர்களுக்கு இந்த மோட்டார்சைக்கிள் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கிளாசிக் 150 மாடலில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 14 பிஹெச்பி பவர் 13.4 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    ஃபிரேம் மற்றும் சஸ்பென்ஷன் மாற்றப்படவில்லை என்ற நிலையில், ட்வின் டெலிஸ்கோபிக் ஃபோர்க், ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், பின்புறம் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் பஜாஜ் பல்சர் கிளாசிக் 150 மாடலின் விலை ரூ.67,437 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ட்வின் டிஸ்க் பிரேக் கொண்ட பல்சர் 150 மாடலை விட ரூ.10,118 வரை குறைவு ஆகும்.
    Next Story
    ×