search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ரூ.1.04 லட்சம் விலை குறைந்த எஸ்.யு.வி. கார்
    X

    இந்தியாவில் ரூ.1.04 லட்சம் விலை குறைந்த எஸ்.யு.வி. கார்

    இந்தியா முழுக்க பல்வேறு கார் மாடல்களின் விலை அதிகரிக்கவும், குறையவும் துவங்கியுள்ளது. இந்நிலையில் எஸ்.யு.வி. மாடல் ஒன்றின் விலை ரூ.1.04 லட்சம் குறைந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகாத மாடல் என்றாலும் கம்பீர தோற்றமும், ஆஃப்-ரோடு செயல்திறன் மிக்க மாடலாக மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் விளங்குகிறது. இந்த காரை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஏற்ற சலுகை கிடைத்துள்ளது. 

    இந்தியாவில் அமலாகியுள்ள புதிய ஜி.எஸ்.டி. வரிமுறையினால் புதிய பஜேரோ ஸ்போர்ட் மாடலின் விலையில் ரூ.1.04 லட்சம் குறைந்துள்ளது. மேலும் மும்பை போன்ற மாநிலங்களில் இதன் விலை மேலும் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. பஜேரோ எஸ்.யு.வி. விலை ரூ.26.4 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) முதல் துவங்குகிறது. 

    மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் டொயோட்டா பார்ச்சியூனர், ஃபோர்டு என்டெவர், இசுசு MU-X மற்றும் ஃபோக்ஸ்வேகன் டியூகன் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 



    2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், இந்திய சந்தையில் நிலவும் போட்டி காரணமாக அதிகப்படியான அப்கிரேடுகளுடன் பஜேரோ ஸ்போர்ட் பிளஸ் எடிஷன் வெளியிடப்பட்டது. பிளஸ் எடிஷன் அப்கிரேடுகளில் பகலிலும் எரியும் எல்இடி, பிளாக் நிறத்திலான பம்ப்பர், கிரில் மற்றும் வீல் ஆர்ச் கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் கிளாஸ் பிளாக் பினிஷ் கொண்ட 17-இன்ச் அலாய் வீல்ஸ், பிளாக் ரூஃப் டெயில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இத்துடன் லெதர் ஸ்டிராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃப் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குரூஸ் கண்ட்ரோல், டிவிடி பிளேயர்கள் மற்றும் 6-ஸ்பீக்கர் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

    மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் சிலக்ட் பிளஸ் மாடலில் 2.5 லிட்டர் 16 வால்வ் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 176 bhp செயல்திறனை 350 Nm பீக் டார்கியூ கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடிள் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 4X4 வேரியன்ட் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் 400 Nm டார்கியூ மற்றும் 4-வீல் டிரைவ் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×