search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு
    X
    விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

    தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை சேத்துப்பட்டில் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசார பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிடுகிறது. அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தொகுதி உடன்பாடு விவகாரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது. இதன்பின்னர், தே.மு.தி.க.-அ.ம.மு.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், சுமுக உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தே.மு.தி.க.வுக்கு கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களுக்காக தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  இதேபோன்று, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை சேத்துப்பட்டில் வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். அவர், எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பிரபுவை ஆதரித்து வேனில் சென்றபடி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
    Next Story
    ×