என் மலர்

  செய்திகள்

  தினகரனுடன் எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் சந்திப்பு
  X

  தினகரனுடன் எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அடையாறு இல்லத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ கருணாஸ் உள்ளிட்ட பலர் சந்தித்தனர்.
  சென்னை:

  ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. அறிவித்துள்ள வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக ஆதரவு அளிக்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த போதும் அதிமுக அம்மா அணியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ,க்களும் ஆதரவு அளிப்பார்களா என்பது சந்தேகமாக தான் உள்ளது. ஏனெனில் அதிமுக அம்மா அணி சார்பில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.  இந்நிலையில், சென்னை அடையாறு இல்லத்தில் தினகரனுடன் அதிமுக கூட்டணியில் உள்ள முக்குலத்தோர் புலிப்படை கட்சி எம்.எல்.ஏ கருணாஸ் சந்தித்தார். மேலும், செந்தில் பாலாஜி உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்களும் தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

  முன்னதாக, மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி கருணாஸ் வெளிநடப்பு செய்து இருந்தார்.
  Next Story
  ×