என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பெண்மணி தனது மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 6 வயது சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
- வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. குடியிருப்பில் உள்ள பூங்காவில் 6 வயதே ஆன இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது அதில் ஒரு சிறுவன் தனது அம்மாவிடம் இதுகுறித்து முறையிடவே, அந்த பெண்மணி தனது மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 6 வயது சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது அங்கே வந்த மற்றொரு சிறுவனின் தாயார் இதுதொடர்பான சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ பதிவு எடுக்க முயன்றார்.
அப்போது அந்த பெண்ணிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவருடைய செல்போனையும் தட்டி விட்டார். சிறு பிள்ளைகள் சண்டையில் பெண் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
- பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைப், கங்கனா ரணாவத் என திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

மறுநாள் முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முதல் ஒரு மாதத்தில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வந்த சூழலிலும், குளிரையும் பொருட்படுத்தாமல் ராமரை தரிசனம் செய்வதற்காக அயோத்தியில் பக்தர்கள் குவிந்து வந்தனர்.
ராமநவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது.

ராமர் கோவில் பிரதிஷ்டை நாளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ராமர் மற்றும் சீதா என பெயரிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
- வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு காவலுக்காக தனது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார்.
- வெள்ளிக்கிழமை காலை, வயலில் உள்ள 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அவரது உடல் கிடந்தது
உத்தரப் பிரதேசத்தில் சொத்துத் தகராறில் காதலியுடன் சேர்ந்து தந்தையை எரித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிகோஹான் பகுதியில் உள்ள ராமாபூர் கிராமத்தை சேர்ந்த ராமு ராவத் (44) என்ற விவசாயி, கடந்த வியாழக்கிழமை வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு காவலுக்காக தனது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை, வயலில் உள்ள 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ராமுவின் மகள் ஜூலி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரணை நடத்திவந்த நிலையில் ராமுவின் மகன் தர்மேஷ் [26 வயது] விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குடும்பத்தின் 2.5 பிகா விளைநிலத்தில் தனது பங்கை தர மறுத்ததால் தர்மேஷ் தனது 24 வயது காதலி சங்கீதாவுடன் சேர்ந்து தனது தந்தையை வயலில் வைத்து எரித்துக்கொன்றார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஆசிரியர் ஒருவர் தனது தனித்துவமான கற்பிக்கும் முறையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
- 54 வினாடிகள் கொண்ட வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வைரலானது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலும், ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துவதும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிப்பதும், மாணவர்களுடன் நட்பாக பழகுவதும் ஆசிரியர்களை மாணவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக மாற்றி விடுகிறது.
சில ஆசிரியர்கள் தங்களது தனித்துவமான கற்பிக்கும் முறைகளால் இணையத்தில் வைரலாகி விடுகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது தனித்துவமான கற்பிக்கும் முறையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அந்த வீடியோவில் இயற்பியல் ஆசிரியரான அவர் வேதியியல் பாடம் நடத்துகிறார்.
அப்போது மூலக்கூறுகளின் பண்பை குறிக்கவும், அவற்றின் தன்மையை விளக்கி கூறிய அவர் டிஜிட்டல் கருவிகளின் உதவியுடன் கற்பித்தார். அப்போது மாணவர்களுக்கு பாடத்தை புரிய வைப்பதற்காக தலைகீழான முறையில் கவிழ்ந்து ஒரு நாற்காலியில் தனது கால்களை சமன் செய்து கைகளை தரையில் வைத்து பாடம் நடத்தினார்.
தொடர்ந்து தனது கைகள், கால்கள் மற்றும் தலையை பயன்படுத்தி வேதியியல் கட்டமைப்பின் வெவ்வேறு கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த காட்சியானது மூலக்கூறு எவ்வாறு சுழல்கிறது என்பதை காட்டும் எளிய வழி என அவர் விளக்கி உள்ளார். இது தொடர்பான 54 வினாடிகள் கொண்ட வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வைரலானது. பயனர்கள் பலரும் ஆசிரியரின் தனித்துவமான கற்பித்தல் முறையை பாராட்டி பதிவிட்டனர்.
- உத்தரப் பிரதேச மணிப்பூரி பகுதி சாலையில் நடந்த இந்த சம்பவம் நடந்துள்ளது.
- முன்னதாக காரில் சென்றவர் ஹெல்மட் அணியவில்லை என உ.பி. போலீஸ் அபராதம் விதித்தது.
சாலையில் கையில் கயிற்றால் கட்டப்பட்ட ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் ஹெல்மட் உடன் போலீஸ் ஒருவர் அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
உத்தரப் பிரதேச மணிப்பூரி பகுதி சாலையில் நடந்த இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
முன்னாள் அமர்ந்து வண்டி ஓட்டுபவர் குற்றவாளி என்றும் அவரை அழைத்துச்செல்ல வேண்டிய கான்ஸ்டபிள் குளிர் அதிகமாக இருந்ததால் வண்டி ஓட்ட மலைத்து கைதியின் கையில் கயிறை கட்டி அவரை வண்டி ஓட்ட வைத்துள்ளதும் தெரியவந்தது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரிப்பதாக உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக காரில் சென்றவர் ஹெல்மட் அணியவில்லை என உ.பி. போலீஸ் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
- 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் என்கிற பகுதியில், இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
சுமார் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள், பைக்கில் பயணித்த ஒருவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இந்து ஆண்டு நண்பரிடம் பேசியதாக கூறி தாக்கி உள்ளனர். மேலும், அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபையும் கழட்ட வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். இந்து நபரிடம் சிறுமிகள் பேசினார்கள் என்ற விஷயம் பெரிதாகியுள்ளது.
அப்போது, சிறுமிகள் தங்களது சகோதரரை அண்ணனை அழைக்க, சிறுமிகள் போனை எடுத்தபோது, அந்த கும்பல் அதை பிடுங்கி எறிந்துள்ளது. மேலும், அந்த சிறுமிகள் இளைஞரிடம் பரிசு கொடுத்ததாகவும் மர்ம கும்பல் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், பைக் ஓட்டிய அந்த இளைஞர் இந்து இல்லை என்று தெரிந்த பிறகுதான் மர்ம கும்பல் சிறுமிகளை விடுவித்தது. அங்கிருந்து தப்பிய சிறுமிகள் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களில் ஒருவர்," தன்னை மர்ம கும்பல் அடித்து ஹிஜாபை கழற்ற முயன்றதாக" வாக்குமூலம் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரூரல் எஸ்பி சாகர் ஜெயின் தெரிவித்தார். பரப்பப்படும் வீடியோவைப் பயன்படுத்தி மற்றவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
- மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
- திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பெங்களூரு போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

எனவே நிகிதா சிங்கானியா குடும்பத்தினர் எங்கிருந்தாலும் 3 நாட்களுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என உத்தரப் பிரதேசம் சென்ற பெங்களூரு போலீஸ் அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
அந்த நோட்டீஸில், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையிலும் சம்பவ சூழ்நிலை காரணமாக உங்களிடம் விசாரணை செய்யவேண்டியது அவசியமாக உள்ளது.
எனவே நீங்கள் எங்கிருந்தாலும் பெங்களூரில் உள்ள விசாரணை அதிகாரி முன் இன்னும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம், தங்கள் கணவர்களுக்கு எதிராக பெண்கள் தாக்கல் செய்யும் திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து எச்சரித்தது.
செவ்வாயன்று நடைபெற்ற வேறு ஒரு விவாகரத்து வழக்கில், நிரந்தர ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய எட்டு அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
- இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்
- 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் வசித்து வந்தவர் ஆர்த்தி தேவி. இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். மூத்த மகள் வேறு ஒரு நகரில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகிறார். எனவே தனது 17 வயது மகன் அமன் உடன் ஆர்த்தி தேவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி செல்ல நேரமாகிறது என தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த மகன் தாயை கீழே தள்ளி விட்டதில் அவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளது. காயம் காரணமாக தாய் ஆர்த்தி தேவி அங்கேயே உயிரிழந்தார். இதனால் பதற்றம் அடைந்த மகன் அமன் தாயின் உயிரிழப்பை மறைக்க முயன்றுள்ளான்.
தொடர்ந்து வீட்டில் சிசிடிவி இணைப்பை துண்டித்து வீட்டை வெளியில் இருந்து பூட்டிவிட்டு தாயின் சடலத்துடன் 4 நாட்கள் உள்ளேயே இருந்துள்ளான். சென்னையில் உள்ள ராம் மிலன் பலமுறை அழைத்தும் ஆர்த்தி தேவி செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.
இடைப்பட்ட நேரத்தில் ஆர்த்தி தேவியின் உடல் அழுகி துர்நாற்றம் வரத் தொடங்கிய நிலையில் ஊதுபத்திகளை ஏற்றி அந்த வாடை வெளியே செல்லாமல் அமன் தடுத்துள்ளான். இருப்பினும் 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான். தந்தை ராம் மிலன் தனது அண்ணியை அழைத்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
அதன்படி அவர் வந்து பார்த்த போது வீடு உள்ளே இருந்து போடப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து உடனே கிளம்பி வந்த ராம் மிலன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரது மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பக்கத்தில் இருந்த கோவிலில் இருந்த அமனும் கண்டுபிடிக்கப்பட்டான்.தனது தாய் கீழே விழுந்ததில் இறந்ததாகவும் பயத்தில் தான் 4 நாட்களாக வெளியே சுற்றித் திரிந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் வீட்டில் ரத்தக் கரை இரண்டு இடங்களில் இருந்த நிலையில் ஆர்த்தி தேவி உடல் இழுத்துச் செல்லப்பட்டதை போலீஸ் உணர்ந்தது. மேலும் அமன் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். பள்ளியிலும் அமன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது.
தொடர்ந்து அமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய் பள்ளிக்கு செல்லுமாறு கூறியதாகவும் இதற்கு அமன் மறுத்ததால், அமன் அதிக பணத்தை வாங்கி செலவழிப்பதாக வாக்குவாதம் ஏற்பட்டு, தாய் விரக்தியில் பணத்தை தன் மீது தூக்கியெறிந்தார் எறிந்தார், எனவே அவரை தான் கீழே தள்ளி விட்டதாக அமன் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அம சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அமனை அனுப்பி வைத்தனர்.
- நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இடையூறாக இருந்த நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் இடிப்பு.
- மசூதி 1839-ல் கட்டப்பட்டது. அப்பகுதியில் சாலை போடப்பட்டது 1956-ல் எனத் தெரிவித்தது மசூதி நிர்வாகம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 185 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பண்டா-பஹ்ரைச் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒருபகுதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதி இடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் புல்டோசர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
செயற்கைக்கோள் மற்றும் மசூதியின் வரலாற்றுப் படங்களை மேற்கொள் காட்டி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்த கட்டடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி பொதுப்பணித்துறையால், இந்த பகுதியை இடிப்பதற்கு அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
பொதுப்பணித்துறையால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒருமாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. அதை பின்பற்ற அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இடையூறாக இருந்த நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
லலாவுலி நூரி மசூதி 1839-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பகுதியில் சாலை 1956-ல் போடப்பட்டது. இருப்பினும், மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது என மசூதியின் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.
அதேவேளையில் மாவட்ட கூடுதல் கலெக்டர் "ஆகஸ்ட் மாதம் மசூதி நிர்வாகம் உள்பட 139 நிறுவனங்களுக்கு (நில உரிமையாளர்கள்) நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பகுதியை நீக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாலை சரிசெய்யும் மணி, பாதாள சாக்கடை திட்டம் கட்டுமான பணிக்காக இந்த இடம் பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது" என்றார்.
கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகம் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் முறையாக தெரிவித்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.
- பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
- பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தால், மற்றவர்கள் அதில் பிரச்சினை செய்யக்கூடாது
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசிய ஒரு கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியது.
'பொது சிவில் சட்டம் அரசியலமைப்பு அவசியம்' என்ற தலைப்பில் உரையாற்றிய சேகர், இது ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தானில் (இந்தியா) வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி இந்த நாடு செயல்படும் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
இதுதான் சட்டம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு இப்படி சொல்கிறீர்களே என்று நீங்கள் கேட்க முடியாது. உண்மையில், பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது. குடும்பம் அல்லது சமூகத்தின் பின்னணியில் பாருங்கள், பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் மதத்தை குறிப்பிடாமல் பல மனைவிகள், ஹலாலா மற்றும் முத்தலாக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நடைமுறையை விமர்சித்த அவர் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நீதிபதியின் பெரும்பான்மையினர் கருத்துக்குப் பரவலாகக் கண்டனம் எழுந்த நிலையில், இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்ட முடியாது என விஷ்வ ஹிந்து பரிஷத் [விஹெச்பி] தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இதே போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தால், மற்றவர்கள் அதில் பிரச்சினை செய்யக்கூடாது என்று தெரிவித்தார். இதற்கிடையே உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
- கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
- செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்த முடியாது.
உத்தரப் பிரதேசத்தில் ரசாயனத்தை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்த விநியோகம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் அகர்வால் டிரேடர்ஸ் உரிமையாளர் அஜய் அகர்வால் உண்மையான பால் போல் தோன்றும் வகையில் ரசாயனங்களில் செயற்கை இனிப்புகள் மற்றும் சுவைகளை கலக்கிறார். இந்த முறையில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அகர்வாலின் கடை மற்றும் 4 குடோன்களில் சோதனை நடத்தி, தொடர்புடைய ரசாயனங்களைப் பறிமுதல் செய்தனர்.
அகர்வால் போலி பாலை உருவாக்க பயன்படுத்திய ரசாயனங்கள் என்ன என்று இன்னும் கண்டறியப்படாத நிலையில் அதில் 5 மில்லிலிட்டர்களை மட்டுமே பயன்படுத்தி 2 லிட்டர் வரை போலி பாலை THAYAARIKAமுடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 1 லிட்டர் ரசாயனத்தைப் பயன்படுத்தி 500 லிட்டர் போலி பாலை தயாரிப்பதற்குச் சமமாகும்.
சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
இந்த கெமிக்கல் பார்முலாவை உள்ளூர் கிராம பால் விற்பனையாளர்களுக்கும் அகர்வால் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த பார்முலாவை அவர் எங்கு தெரிந்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்தார்
- அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடியிருப்பு ஒன்றின் கழிப்பறைக் குழாயிலிருந்து 6 மாத கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்திரபுரம் பகுதியில் உள்ள அந்த குடியிருப்பின் உரிமையாளர் தேவேந்திரன் நேற்று காலையில் தண்ணீர் தேங்கியதால் குழாய் கழன்று விழுந்ததாகவும் குழாயின் உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் இந்திரபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
தனது குடியிருப்பில் உள்ள வீடுகளில் ஒன்பது பேர் வாடகைக்கு வசித்து வருவதாக உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர். குழாயிலிருந்து மீட்கப்பட்ட 6 மாத கரு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அங்கு வசித்து வரும் 9 வீட்டாரின் டிஎன்ஏ மற்றும் ஓனர் தேவேந்திரன் டிஎன்ஏ, கருவில் உள்ள டிஎன்ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டு, அது யாருடன் பொருந்துகிறது என்று ஆராய உள்ளதாக இந்திரபுரம் காவல் உதவி ஆணையர் சுவதந்திர குமார் சிங் தெரிவித்தார்.






