என் மலர்
இந்தியா

குடிகார கணவர்கள் கொடுமை.. வீட்டை விட்டு ஓடி வந்து ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்ட பெண்கள்
- கோரக்பூரில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து சம்பாதிப்போம்
- குறைந்த பட்சம் கணவர்களின் அடியை இனி தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை
குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர்களின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடி வந்த இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் ருத்ராபூரில் உள்ள சோட்டி காசி என்றும் அழைக்கப்படும் சிவன் கோயிலில் கவிதாவும், பப்லு என்கிற குஞ்சாவும் கடந்த வியாழன் மாலை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கோரக்பூரில் இருவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளனர்.
தங்கள் இருவரின் கணவர்களும் குடிகாரர்களாகவும், தினமும் தங்களுடன் சண்டைபோட்டுத் துன்புறுத்துவதையும் குறித்து இருவரும் தத்தமது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. எனவே தற்போது வீட்டை விட்டு வெளியேறி ஓரினச்சேர்க்கை திருமணம் செய்துள்ளனர்.
திருமணம் குறித்து பேசுகையில், இருவரது கணவர்களும் மது அருந்திவிட்டு தினமும் தங்களிடம் சண்டை போடுவதாக கவிதா கூறினார். நாங்கள் இருவரும் ஏற்கனவே காதலித்தோம். எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
நாங்கள் இருவரும் வீட்டையும் கணவர்களையும் விட்டு வெளியேறி ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். திருமணம் முடிந்து இருவரும் கோரக்பூர் செல்வதாகவும், அங்கு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து சம்பாதிப்போம் என்றும் கூறினார்.
சமூகம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலை இல்லை என்றும் குறைந்த பட்சம் கணவர்களின் அடியை இனி தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.






