என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை அபினவ் தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளான்.
    • அவனது காதலியை நேரில் சந்தித்து இந்த ஆபாச புகைப்படங்களை காட்டி அபினவ் மிரட்டியுள்ளான்.

    உத்தரபிரதேசத்தில் தனது காதலியின் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டிய தனது நண்பரை 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மீரட் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அபினவ் என்ற சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அண்மையில் தனது நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை அபினவ் தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளான்

    பின்னர், அவனது காதலியை நேரில் சந்தித்து இந்த ஆபாச புகைப்படங்களை காட்டி நான் சொல்வது போல நீ நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

    இதனால் பதற்றமடைந்த அந்த பெண், நடந்த சம்பவத்தை காதலனிடம் தெரிவித்தார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த காதலன், அபினவை காளி நதிக்கரைக்கு கூட்டிச் சென்று சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த சிறுவனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்கள் அவரது செயலைப் பற்றி விவாதித்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
    • ஆசிரியரை விசாரணைக்காகக் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வகுப்பறையில் உக்கார்ந்து ஆசிரியர் ஆபாசப் படம் பார்த்ததும், அதை கண்டுபிடித்த மாணவனை சரமாரியாகத் தாக்கிய சம்பவமும் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் குல்தீப் யாதவ் வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்ததைக் கண்டு 8 வயது மாணவன் ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து விவாதித்து சிரித்துள்ளான்.

    இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த பையனின் தலைமுடியைப் பிடித்து சுவரின் மீது அவனை மோதி சரமாரியாகத் தாக்கியுள்ளார். காயமடைந்த சிறுவனின் தந்தை கொடுத்த புகாரை அடுத்து ஆசிரியரை விசாரணைக்காகக் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

     

    சிறுவனின் தந்தை கூற்றுப்படி, வகுப்பறையில் குல்தீப் தனது மொபைல் போனில் ஒரு ஆபாச வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது மாணவர்கள் அவரது செயலைப் பற்றி விவாதித்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

    மாணவர்களின் சிரிப்பால் ஆத்திரமடைந்த குல்தீப், என் மகனைத் கொடூரமாகத் தாக்கினார். அவர் என் மகனின் தலைமுடியைப் பிடித்து சுவரில் தலையை ஓங்கி அறைந்தார். மேலும் என் மகனை கைத்தடியால் தாக்கினார். என் மகனுக்கு காது உட்பட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். 

    • திருமணத்துக்கு முந்தைய இரவு நிகழ்ச்சியில் சாப்பிடும்போது ரொட்டிகள் சுட்டு வழங்க தாமதமானது
    • மணமகன் உடனே தனது உறவினரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    திருமணத்தில் உணவு வழங்க தாமதமானதால் மணமகன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 22 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்துக்கு முந்தைய இரவு நிகழ்ச்சியில் சாப்பிடும்போது ரொட்டிகள் சுட்டு வழங்க தாமதமானதாக  கூறி மணமகன் மெஹ்தாப் மற்றும் அவரது உறவினர்கள் திருமணத்தையே நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

    அவர்களை தடுக்க மணமகள் வீட்டார் முயன்றபோதும் அவர்கள் விடாப்பிடியாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின் அந்த மணமகன் உடனே தனது உறவினரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    இதனை அறிந்த மணமகளின் குடும்பத்தினர் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் டிசம்பர் 24 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

    அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் செலவிட்டதாகவும், அதில் ரூ.1.5 லட்சம் வரதட்சணையாக மணமகன் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் மணமகள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் இருந்து அவளது தந்தை மட்டும் மாமா மீண்டும் வீட்டுக்கே அழைத்து வந்தனர்.
    • தாத்தா தன்னை வயலுக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொள்வார்

    தனது தாத்தா, தந்தை மற்றும் மாமா தன்னை ஒரு வருடமாக பலமுறை பலாத்காரம் செய்ததாக 14 வயது கர்ப்பிணி சிறுமி வாக்குமூலம் அளித்ததன் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் உள்ள பிதுனா கோட்வாலி பகுதியில் வசித்துவரும் சிறுமி தனது அத்தையுடன் கடந்த வியாழக்கிழமை அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

    சுமார் 10 வருடங்கள் முன்னர் பெற்றோர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சிறுமி தாயுடன் டெல்லிக்கு சென்றாள். ஆனால் 4 வருடங்கள் முன்பு அவளை டெல்லியில் இருந்து அவளது தந்தை மற்றும் மாமா மீண்டும் வீட்டுக்கே அழைத்து வந்தனர். சிறுமியின் தாய் கடந்த வருடம் உயிரிழந்துள்ளார்.

    இதனிடையே, கடந்த ஒரு வருடமாக, தந்தை, மாமா மற்றும் தாத்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று சிறுமி போலீசிடம் கூறினாள்.

    தனது தாத்தா தன்னை வயலுக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொள்வார் என்றும், தனது மாமா தனது அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைவார் என்றும், தந்தை தன்னை கட்டி வைப்பார், எதிர்ப்பு தெரிவித்தால் கொன்றுவிடுவதாக மிரட்டுவார்கள் என்றும் சிறுமி போலீசிடம் கூறினாள்.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாக இருந்தபோது, அதை அவள் அத்தைக்கு தெரிவித்தாள், ஆனால் அத்தை அப்போது சிறுமிக்கு உதவவில்லை.

    இதனிடையே கடந்த டிசம்பர் 22 அன்று, தந்தை, மாமா மற்றும் தாத்தா தன்னை கொல்ல சதி செய்ததாகவும் அதனால் சிறுமி அத்தை வீட்டுக்கு தப்பிச் சென்று பின் காவல் நிலையத்துக்கு இருவரும் வந்துள்ளனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

    சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அன்றைய இரவே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலோக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.  

    சைல்டு லைன் [குழந்தைகள் ஹெல்ப்லைன்] இந்தியா - 1098; பெண்கள் ஹெல்ப்லைன் - 181; வன்முறைக்கு எதிரான புகார்களுக்கு தேசிய பெண்கள் ஆணைய ஹெல்ப்லைன் - 7827170170

    • 3 பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம், சேர்ந்து சாப்பிடுவோம், சேர்ந்து தூங்குகிறோம்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 1.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலிகள் கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள தியோரியா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் கழுத்தில் 2 தாலிகள் அணிந்திருக்கிறார்.

    வீடியோவில் அவர் அலங்காரம் செய்து மணப்பெண் போல காட்சியளிக்கிறார். அவரது அருகில் 2 கணவர்களும் இருக்கின்றனர். அவர்கள் 2 பேரும் சகோதரர்கள் என கூறப்படுகிறது. 3 பேரும் ஒன்றாக வாழ்கின்றனராம்.

    இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், ஒரு தாலி ஒரு கணவருக்காகவும், மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன். நாங்கள் 3 பேரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 3 பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம், சேர்ந்து சாப்பிடுவோம், சேர்ந்து தூங்குகிறோம். 2 கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.



    • பூனம் மணமகளாகவும், சஞ்சனா குப்தா அவரது தாயாகவும் நடிப்பார்கள்.
    • நான் திருமணம் செய்ய மறுத்தபோது, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவதாகவும், பொய் வழக்குகளில் சிக்க வைப்போம் மிரட்டினர்

    உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் திருமணமாகாத ஆண்களை ஏமாற்றி, அவர்களது வீடுகளில் இருந்த பணம் மற்றும் நகைகளைத் திருடும் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் அடங்கிய மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது.

    பூனம், சஞ்சனா குப்தா,விமலேஷ் வர்மா, தர்மேந்திர பிரஜாபதி உள்ளிட்டோரை உள்ளடக்கியது இந்த கும்பல்.

    பூனம் மணமகளாகவும், சஞ்சனா குப்தா அவரது தாயாகவும் நடிப்பார்கள். விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகிய இருவர் ஏமாறக்கூடிய ஆட்களை தேடிப்பிடித்து பூனத்திற்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.

    சிம்பிளாக கோர்ட்டில் வைத்து திருமணத்தை முடித்து பூனம் மணமகன் வீட்டுக்கு புது மருமகளாக செல்வார். சந்தர்ப்பம் பார்த்து, வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்று விடுவார். சங்கர் உபாத்தியாய் என்ற நபர் தான் மோசடி செய்யப்படுவதை யோகித்து போலீசில் அளித்த புகாரின் பேரில் இந்த கும்பல் சிக்கியுள்ளது. சங்கருக்கு முன்பே 6 பேரிடம் இந்த கும்பல் வெற்றிகரமாக வேலையை காட்டி உள்ளது.

     

    சிங்கிளாக இருக்கும் சங்கர் திருமணத்துக்கு வரன் தேடியுள்ளார். இதையறிந்து விமலேஷ் சங்கரை அணுகி பெண் இருப்பதாகவும் திருமணத்துக்கு ரூ.1.5 லட்சம் செலவழிக்க வேண்டும் என்றும் சங்கரிடம் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை சங்கரை கோர்ட்டுக்கு அழைத்து பூனம் உடன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    அப்போது அவரிடம் ரூ.1.5 லட்சம் கேட்டுள்ளனர். சந்தேகமடைந்த சங்கர் மணமகள் பூனம் மற்றும் அவரது தாயராக நடித்த சஞ்சனா குப்தாவிடம் ஆதார் அட்டையை கேட்டுள்ளார். ஆனால் சங்கரிடம் இந்த கும்பல் மழுப்பியுள்ளது. அவர்கள் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று நான் சந்தேகப்பட்டேன்.

    நான் திருமணம் செய்ய மறுத்தபோது, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவதாகவும், பொய் வழக்குகளில் சிக்க வைப்போம் என்றும் மிரட்டினர். நான் யோசிக்க நேரம் வேண்டும் என்று கூறிவிட்டு வெளியேறினேன் என்று சங்கர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    புகரைத் தொடர்ந்து கும்பலை சேர்ந்த நான்கு பேரையும் போலீஸ் கைது செய்தது. சிங்கிளாக இருக்கும் ஆண்களை குறிவைத்து அவர்கள் நடத்திய மோசடிகள் விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவந்தன. 

    • இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
    • இவர்களின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

    உத்திரபிரதேசத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.மேலும், அந்த இளைஞருக்கு வெறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக முசாபர்நகரில் உள்ள ஓட்டலில் காதலனும் காதலியும் சந்தித்து பேசியுள்ளனர்.

    அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளம்பெண் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு காதலின் அந்தரங்க உறுப்பை வெட்டியதோடு தனது கையையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய இளம்பெண்ணை கைது செய்தனர். 

    • காலிஸ்தான் பயங்கரவாதிகளும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் கமாண்டர் படை அமைப்பை சேர்ந்தவர்கள்.
    • கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏகே 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் இன்று அதிகாலை போலீசாரின் என்கவுண்டரில் 3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட குர்விந்தர் சிங் (25), வீரேந்திர சிங் (எ) ரவி (23) மற்றும் ஜஸ்பிரீத் சிங் (எ) பிரதாப் சிங் (18) ஆகிய 3 காலிஸ்தான் பயங்கரவாதிகளும் தடை செய்யப்பட்ட இயக்கமான காலிஸ்தான் கமாண்டர் படை அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏகே 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பதுங்கியுள்ளதாக பஞ்சாப் போலீசாருக்கு கிடைத்த தகவலை உ.பி. போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து உ.பி. போலீசார் நடத்திய ரகசிய ஆபரேஷனில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    • மும்பை செல்லும் அந்தியோதயா விரைவு ரெயிலின் [15101] கதவுகள் வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்தது
    • கற்களால் கதவின் கண்ணாடியை உடைத்தும், ஜன்னல் கண்ணாடியுடன் இருந்த இரும்புக் கம்பியை வளைக்கவும் முயன்றுள்ளனர்.

    ஸ்டேஷனில் வந்து நின்று ரெயிலின் கதவை திறக்காததால் பயணிகள் ஆத்திரத்தில் ரெயிலை சூறையாடிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி ரயில் நிலையத்தில், கோபமடைந்த பயணிகள் அந்தியோத்தியா எக்ஸ்பிரஸ் ரயிலை சேதப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

    மும்பை செல்லும் அந்தியோதயா விரைவு ரெயிலின் [15101] கதவுகள் வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே ஏறி சீட் பிடிக்க காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்தனர்.

    இதனால் கற்களால் கதவின் கண்ணாடியை உடைத்தும், ஜன்னல் கண்ணாடியுடன் இருந்த இரும்புக் கம்பியை வளைக்கவும் முயன்றுள்ளனர்.

    ஒரு பயணி கையிலிருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து, ரயிலின் மூடிய கதவின் கண்ணாடியை உடைக்க அதைப் பயன்படுத்துவதும் மற்றவர்கள் ஜன்னல் கண்ணாடியின் இரும்பு கம்பியை அகற்றுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • உ.பி. அணி தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.

    லக்னோ:

    கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த அதிரடி ஆட்டமே அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க சிறந்த வழியாக அமைந்தது.

    இந்நிலையில், உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ரிங்கு சிங் கூறியதாவது:

    புதிய ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி கேப்டன் பதவி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை.

    2015 மற்றும் 16ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற தமது உத்தரப்பிரதேச அணி மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே நோக்கம்.

    நான் யூபி டி20 லீக்கில் பந்து வீச முயற்சித்தேன். இன்றைய கிரிக்கெட் தொடர் ஒரு முழு பேக்கேஜை தான் விரும்புகிறது. பேட்டிங் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் செய்யக்கூடிய வீரராக இருப்பது முக்கியம்.

    எனவே நான் தற்போது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். கேப்டனாக எனக்கு இப்போது ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இதற்கு நான் தயாராக இருப்பது அவசியம்.

    நான் கடவுளை எப்போதும் நம்புகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 சிக்சர்கள் அடித்த பிறகு இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது.

    இப்போதும் கடவுள் எனக்காக ஏதாவது செய்வார் என்று உணர்கிறேன். ஆனால் அதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச அணி இன்று தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.

    • மாநில மின்சாரத் துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
    • மின்கட்டணம் பூஜ்ஜியமாக இருப்பது கண்டறியப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாஉர் ரஹ்மான் பார்க் மின்சாரம் திருடியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு ரூ. 1 கோடியே 91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இவரது வீட்டில் இரண்டு மின் மீட்டர்களில் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து அம்மாநில மின்சாரத் துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

    முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச மாநில மின்சாரத் துறை அதிகாரிகள் எம்.பி.யின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, வீட்டில் உள்ள் மின்சாதனங்களை கணக்கெடுத்தனர். அப்போது மின் இணைப்பு சுமை எட்டில் ஒரு பங்காக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    எம்.பி.யின் வீட்டில் 50க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள், டீப் ஃப்ரீசர், 3 ஸ்பிலிட் ஏசிகள், 2 ஃப்ரிட்ஜ்கள், ஒரு காபி மேக்கர், கீசர், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட கனரக மின்சாதனங்கள் வீட்டில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். எனினும், கடந்த 6 மாதங்களாக எம்.பி.யின் இல்லத்தில் மின்கட்டணம் பூஜ்ஜியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

    இது குறித்து அம்மாநில மின்சாரத் துறையின் வெளியிட்ட தகவல்களில், எம்.பி. ஜியாஉர் ரஹ்மான் 2 கிலோவாட் இணைப்பை எடுத்துள்ளார். அதேசமயம் சுமை 16.5 கிலோவாட் ஆகும். இரண்டு நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்ட புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் 5.5 கிலோவாட் மின் சுமையைக் காட்டியது.

    மின் சுமை குறித்து விசாரித்த போது, வீட்டில் 10 கிலோவாட் சோலார் பேனல் மற்றும் 5 கிலோவாட் ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளதாக எம்.பி. ஜியாஉர் ரஹ்மானின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதை கொண்டு எம்.பி.யின் வீட்டில் 19 கிலோவாட் மின்சாரம் ஏற்ற முடியும். ஆனால், குடியிருப்பில் உள்ள சோலார் பேனல்கள் இயங்கவில்லை என மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்தார்.

    அதன்படி மாவட்ட மின்சாரக் குழுத் தலைவராகவும் செயல்படும் சமாஜ்வாதி எம்.பி. ஜியாஉற் ரஹ்மானுக்கு எதிராக மின் திருட்டு தடுப்புச் சட்டம் பிரிவு 135ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, எம்.பி.யின் தந்தை மம்லுக் உர் ரஹ்மான், மாநில மின் துறை அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அரசுப் பணியைத் தடுத்ததாக பார்கின் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    • தலையில் சிறிய ‘பிரஷ்’ மூலம் எண்ணெயை தேய்த்து அனுப்பி வைத்தார் சல்மான்.
    • சல்மான் நடத்திய முகாமில் எண்ணெய் தேய்த்துக் கொண்ட பலருக்கும் உச்சந்தலையில் கடுமையான அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டது.

    மீரட்:

    போர், பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம் என உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், இன்றைய வாலிபர்களை பெரிதும் வாட்டி வதைக்கும் விஷயம் முடி உதிர்தல் என்றால் அது மிகையாகாது.

    குறிப்பாக வழுக்கை தலையில் மீண்டும் முடியை வளர வைக்க எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் வாலிபர்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி பேர்வழிகள் நூதன முறைகளில் வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

    அப்படி ஒரு நூதன மோசடி உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் அரங்கேறியுள்ளது.

    சல்மான் என்பவர் தன்னிடம் உள்ள எண்ணெயை தேய்த்தால் வழுக்கை தலையில் விரைவாக முடி வளரும் என்றும், ஒரு முறை அந்த எண்ணெயை தேய்த்துக் கொள்ள வெறும் ரூ.20 மட்டுமே என்றும் செய்தித்தாளில் விளம்பரம் செய்தார். முகாம் நடைபெறும் முகவரியையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இதை நம்பி நூற்றுக்கணக்கான வாலிபர்கள் அங்கு குவிந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் திரண்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாலிபர்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.20 பெற்றுக்கொண்டு அவர்களின் தலையில் சிறிய 'பிரஷ்' மூலம் எண்ணெயை தேய்த்து அனுப்பி வைத்தார் சல்மான்.

    இதில் வேடிக்கை என்னவெனில் வழுக்கை தலையில் முடி வளரும் எனக் கூறி வாலிபர்களின் தலையில் எண்ணெய் தேய்த்துவிட்ட சல்மானுக்கும் வழுக்கை தலை தான். ஆனால் முகாமுக்கு வந்திருந்த வாலிபர்கள் யாரும் அதைப்பற்றி சிந்திக்கவில்லை.

    இந்த நிலையில் சல்மான் நடத்திய முகாமில் எண்ணெய் தேய்த்துக் கொண்ட பலருக்கும் உச்சந்தலையில் கடுமையான அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டது. அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஷதாப் என்பவர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் வழுக்கை தலையில் முடி வளரும் என பொய்யான வாக்குறுதி அளித்து பணம் சுருட்டியது தெரியவந்தது. இதற்கு முன்னர் டெல்லி, உத்தரகாண்ட், அரியானா ஆகிய மாநிலங்களிலும் இதேபோல போலி முகாம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×