என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை.
- இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு வெளியே சடலத்தின் கால்களை பிடித்து 2 ஆண்கள் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் என்று கூறப்படும் 2 நபர்கள் சடலத்தின் கால்களில் துணியால் கட்டிக்கொண்டு பிரேதப் பரிசோதனை கூடத்திற்குள் நுழைகிறார்கள்.
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- OYO என்பது இந்தியாவில் முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளம் ஆகும்.
- தங்கள் உறவுக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
திருமணமாகாத ஜோடிகளுக்கு இனிமேல் அறை கிடையாது என்று OYO நிறுவனம் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த விதியை OYO நிறுவனம் இந்த வருட தொடக்கம் முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
OYO என்பது இந்தியாவில் முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளம் ஆகும். OYO மூலம் முன்பதிவு செய்யப்படும் விடுதிகளின் விதிகளை நிறுவனமானது திருத்தி அமைத்துள்ளது.
இதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் உட்பட அனைத்து ஜோடிகளும் செக்-இன் செய்யும்போது, தங்கள் உறவுக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

மீரட்டில் இந்த நடைமுறைக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
மீரட்டில் சமூக குழுக்களிடம் இருந்து வந்த கருத்துக்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. OYO தளத்தை பயன்படுத்தி திருமணமாகாது ஆண்- பெண் உறவு வைத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து ஒன்று நிலவுவது குறிப்பிடத்தக்கது.

- மாணவிகளின் சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
- போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு பெண்ணுக்காக 2 பேர் சண்டை போட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் உத்தரபிரதேசத்தில் ஒரு மாணவனை விரும்பிய 2 மாணவிகள் சாலையில் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அங்குள்ள சிங்வாலி போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட அமிநகர் சராய் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அதே பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் விரும்புவதாகவும், இருவரும் மாணவனுடன் அடிக்கடி பேசி, பழகுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பவத்தன்று அந்த மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கி சண்டை போட்டுள்ளனர்.
அதோடு ஒருவரை ஒருவர் காலால் உதைப்பது, கைகளால் மாறி மாறி குத்துவது என சண்டை அதிகமானதை பார்த்த சக மாணவிகளும், அவ்வழியாக சென்றவர்களும் மாணவிகளின் சண்டையை நிறுத்தினர். இதற்கிடையே மாணவிகளின் சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது.
- இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா என்று மோடி கூறியிருந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகா கும்பமேளா நடக்கிறது. இந்த மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரயாக்ராஜ் நகரம் கும்பமேளாவின்போது அழகாகவும், சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும். அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தை பாதுகாக்க இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
இந்துக்கள் அல்லாதோருக்கு கடை அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு கடைகளை கொடுத்தால் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற சுகாதாரமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா. இந்த நிகழ்வில் எந்த பாகுபாடும் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்" என்று கூறியிருந்த நிலையில், மஹந்த் ரவீந்திர புரியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
- இளைஞனை பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாக பிடித்தனர்.
- இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டின் மொட்டை மாடியில் வேறு ஒருவருடன் மனைவி இருந்ததை பார்த்த கணவன் ஆத்திரத்தில் வன்முறையை கையில் எடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள அவர்களின் வீட்டின் மொட்டை மாடியில் தனது மனைவியுடன் இருந்த அந்த இளைஞனை பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து அந்த இளைஞரை அடித்தும் உதைத்தும் கணவர் மற்றும் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கும் வீடியோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை மன்னித்து விடுமாறும் இனி அங்கு திருப்பி வரவே மாட்டேன் என்றும் அவர்களிடம் இளைஞன் கெஞ்சுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
- நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.
- எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர்.
புத்தாண்டு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நாகா பகுதியில் உள்ள ஷரன்ஜித் என்ற ஹோட்டல் விடுதி அறையில் வைத்து 24 வயது இளைஞன் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை இன்று படுகொலை செய்துள்ளான்.
ஹோட்டல் ஊழியர்களின் கூற்றுப்படி, டிசம்பர் 30 அன்று அந்த குடும்பம் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளது .
குற்றம் சாட்டப்பட்டவர், ஆக்ராவின் குபேர்பூரை சேர்ந்த அர்ஷத். தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை விடுதிக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவை இழக்கச்செய்து அவர்களின் கை மணிக்கட்டை அறுத்து கொன்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ஹோட்டல் அறையில் இருந்து 5 பேரின் உடல்களை மீட்டனர்.
இறந்தவர்கள் அலியா (9), அல்ஷியா (19), அக்சா (16) மற்றும் ரஹ்மீன் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் அனைவரும் அர்ஷத்தின் சகோதரிகள். ஐந்தாவது உடல் தாயார் அஸ்மா உடையது. அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் காவல்துறை உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் இருந்து அர்ஷத்தை கைது செய்தது என்று டிசிபி ரவீனா கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டு, தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களைச் சேகரித்து வருவதாக ரவீனா கூறினார்.
சமபவத்தின் பின் தலைமறைவான அர்ஷத்தின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. குடும்பத் தகராரே கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த பின், குற்றவாளி அர்ஷத் வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார். வீடியோவில் இறந்த தாய் மற்றும் சகோதரிகளைக் காட்டினார். இதன் போது அவருடன் அவரது தந்தையும் இருந்தார்.
என் பெயர் ஆசாத்... இன்று, குடிசைவாசிகளின் [அக்கபக்கத்தினரின்] நிர்ப்பந்தத்தால், இந்த நடவடிக்கையை எடுத்தோம். தாயையும் சகோதரிகளையும் என் கைகளால் கொன்றேன். இதற்கு, எங்கள் காலனியில் வசிப்பவர்களே பொறுப்பு. எங்களுடைய வீட்டைப் பறிப்பதற்காக இவர்கள் எத்தனையோ அட்டூழியங்களைச் செய்தார்கள். நாங்கள் குரல் எழுப்பியபோது, யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. யோகி ஜிக்கு [முதல்வருக்கு] ஒரு வேண்டுகோள், இது போன்றவர்களை விட்டுவிடாதீர்கள், மரணத்திற்கு முழு காலனியும் பொறுப்பு.
இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் ராணு என்கிற அஃப்தாப் அகமது, அலீம் கான், சலீம் கான், டிரைவர் அகமது, அசார் மற்றும் சிறுமிகளை விற்கும் அவரது உறவினர்கள். எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர். நாங்கள் இதை எதிர்த்தோம். காவல்துறையிடம் உதவி கேட்டேன், தலைவர்களிடம் உதவி கேட்டேன், ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை.
நாங்கள் படவுன் குடியிருப்பாளர்கள். எங்களை வங்கதேசத்தினர் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் படவுனில் வசிக்கும் எங்கள் அத்தையிடம் இருந்து நீங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.. நாங்கள் மதம் மாற விரும்பினோம். இன்று என் சகோதரிகள் அனைவரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். நானும் இறப்பேன்.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஜி... எல்லா முஸ்லிமும் ஒரே மாதிரி இல்லை. இந்தியாவில் எந்த குடும்பமும் இதை மீண்டும் செய்யக்கூடாது. உயிருடன் இருக்கும் போது இல்லை என்றால் இறந்த பிறகு நீதி வழங்குங்கள். நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.
காலனி மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பல ஏழைகளின் பெண் குழந்தைகளை இவர்கள் தூக்கிச் சென்று விற்கின்றனர். காவல்துறையினரிடம் பணம் கொடுத்து அமைதிப்படுத்துகிறார்கள்.
எனது குடும்பத்தின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது உங்கள் விருப்பம். நான் அவர்களை கொடூரமாக கொன்றேன். கூப்பிய கைகளுடன் நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களைச் சந்திக்க லக்னோ வந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
- ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது.
- கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு
உத்தரப் பிரதேசத்தில் மெடிக்கல் ஷாப் கடைக்காரரிடம் பெண் மருந்து ஆய்வாளர் [Drug inspector] ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்த மருந்து ஆய்வாளர் நிதி பாண்டே, மருந்தகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது உரிமையாளரிடம் லஞ்சம் கேட்கிறார்.
'ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது. எவ்வளவு சொன்னாலும் செய். கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு' என்று அவர் மருந்தக உரிமையாளரிடம் லஞ்சப் பணத்துக்கு பேரம் பேசுவது பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ பரவியதை தொடர்ந்து டிசம்பர் 30 ஆம் தேதி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்குதல் மற்றும் பேரம் பேசுதல், வியாபாரியை அச்சுறுத்தல் மற்றும் வியாபாரத்திற்கு இடையூறு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் உ.பி. வருவாய், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் முதன்மை செயலர் பி.குருபிரசாத் இந்த பணிநீக்க உத்தரவை பிறப்பித்தார்.
இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளை பாண்டே மறுத்துள்ளார். தனியார் ஊடகத்திடம் பேசிய அவர், வைரலாகும் வீடியோ முற்றிலும் போலியானது. இது வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ. அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.
- 8 ஆண்டுகளாக அவரது வீட்டில் ஒருவராக வளர்ந்து வரும் அந்த குரங்குக்கு ராணி என்று பெயரிட்டுள்ளனர்.
- வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் அவை வைரலாகி பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் உள்ள சத்வா கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத் என்ற விவசாயி குடும்பத்தினர் தங்கள் செல்லப் பிராணியாக ஒரு குரங்கை வளர்த்து வருகின்றனர். 8 ஆண்டுகளாக அவரது வீட்டில் ஒருவராக வளர்ந்து வரும் அந்த குரங்குக்கு ராணி என்று பெயரிட்டுள்ளனர்.
ராணி, விஸ்வநாத்தின் மனைவியுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வநாத்தின் மனைவியுடன் சேர்ந்து ரொட்டி தயாரிப்பது, பாத்திரங்களை கழுவுவது உள்ளிட்ட வீட்டு வேலைகள் அனைத்திலும் ராணி உதவி செய்கிறதாம்.
இது தொடர்பான வீடியோக்களை விஸ்வநாத்தின் மகன் ஆகாஷ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் அவை வைரலாகி பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
- கோவிலுக்குள் வந்த ஒரு நபர், சாமி சன்னதி முன்பு அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.
- வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கவிஞர் பாடல் எழுதினார். அதுபோல் திருடர்களும் பல விதமாக உள்ளனர். திருட வந்த வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டவர்கள், தூங்கியவர்கள், மது வகைகளை குடித்து விட்டு குத்தாட்டம் போட்டவர்கள் என்று பல வினோத செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளனர்.
அதுபோல் இங்கு ஒரு திருடன், கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு சாமியிடம் வரம் பெற்று செல்வதுபோல், சாமி சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்றுள்ளான்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அனுமன் கோவில் ஒன்றில் வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் கோவிலுக்குள் வந்த ஒரு நபர், சாமி சன்னதி முன்பு அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.
அதை பார்க்கும் மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட பக்திமான் இவர் என்றே நினைக்கத்தோன்றும். ஆனால் அதன் பின்னர் அவர் செய்த சம்பவம்தான், அட! இதுக்குத்தானா இந்த 'பில்டப்' என்று கேட்கும் வகையில் இருந்தது.
சுமார் 15 நிமிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்த அந்த நபர், கண்களை மெல்ல திறந்து பார்த்தார். பின்னர் மெல்ல எழுந்து கருவறைக்குள் சென்ற அந்த நபர், அனுமன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை நைசாக எடுத்து தன்னிடம் இருந்த துணிப்பைக்குள் வைத்தார்.
அக்கம்பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா என்பதை பார்த்த அந்த நபர் மெதுவாக கோவிலில் இருந்து வெளியே சென்றார். இந்த சம்பவங்கள் அனைத்தும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
சற்று நேரத்தில் சன்னதிக்கு வந்த பூசாரி, சாமி சிலையில் இருந்த கிரீடம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசிலும் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரை தேடிவருகிறார்கள்.
கோவிலில் சாமியிடம் வேண்டிக்கொண்டு, சாமி சிலையில் இருந்த கிரீடத்தையே திருடிச்சென்ற அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- உ.பி. பிரயாக்ராஜில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும்.
- அடுத்த மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கவுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்க உள்ளதால் பிரயக்ராஜில் மகா கும்பமேளா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையொட்டி பிரயக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் தற்காலிகமாக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் முதலாவதாக பிறந்த குழந்தைக்கு 'மகா கும்ப்' என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.
- தீ முன்பு நின்று ‘ரீல்ஸ் வீடியோ’ எடுத்துள்ளார்.
- வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை கண்டித்து பதிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காகவே வாலிபர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் பதேபூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் முன்பு நின்று கொண்டு வாலிபர் ஒருவர் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தீ முன்பு நின்று 'ரீல்ஸ் வீடியோ' எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை கண்டித்து பதிவிட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
- நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை அபினவ் தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளான்.
- அவனது காதலியை நேரில் சந்தித்து இந்த ஆபாச புகைப்படங்களை காட்டி அபினவ் மிரட்டியுள்ளான்.
உத்தரபிரதேசத்தில் தனது காதலியின் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டிய தனது நண்பரை 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அபினவ் என்ற சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அண்மையில் தனது நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை அபினவ் தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளான்
பின்னர், அவனது காதலியை நேரில் சந்தித்து இந்த ஆபாச புகைப்படங்களை காட்டி நான் சொல்வது போல நீ நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனால் பதற்றமடைந்த அந்த பெண், நடந்த சம்பவத்தை காதலனிடம் தெரிவித்தார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த காதலன், அபினவை காளி நதிக்கரைக்கு கூட்டிச் சென்று சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த சிறுவனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.






