என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ரெயிலில் தனியாக பயணம் செய்த கர்ப்பிணி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழகம் முழுவதும் ரெயில்வே மற்றும் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் தனியாக பயணம் செய்த கர்ப்பிணி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் ரெயில்வே மற்றும் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் பெண்கள் பெட்டி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 899 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தெரிவித்தார்.

    • இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
    • பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!

    உலகத் தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!

    இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!

    அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!

    உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என்று தெரிவித்துள்ளார்.

    • பிரபுதேவாவின் பிரமாண்டமான நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது.
    • பிப்ரவரி 22-ம் தேதி சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    சென்னை:

    இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    இந்த நடன நிகழ்ச்சி பிப்ரவரி 22-ம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார்.

    ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது.


    இந்த நடன நிகழ்ச்சியில் நடிகை சிருஷ்டி டாங்கே உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தற்போது பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சிருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். மரியாதை இல்லாத இடத்தில் தன்னால் வேலை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

    • புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை உயர்ந்திருக்கிறது.
    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1,14,59,000 தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

    புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை உயர்ந்திருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

    காலை உணவுத் திட்டம் மூலம் 17,53,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நான் முதல்வன் திட்டம் மூலம் 2.60 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.

    உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைமுன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறுகையில், " சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்!

    தமிழே அறம்! தமிழே அரண்!" என்றார்.

    • இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை.
    • இந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்.

    நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் கூறியிருப்பதாவது:-

    இந்தி படிக்க வேண்டிய தேவை என்ன ? இந்தியை படிப்பதால் என்ன பயன் ?

    இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை. இந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்.

    நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது.

    அந்தப் பள்ளி இன்னுமும் செயல்பட கூட தொடங்கவில்லை. எங்களது இடத்தில் பள்ளியை தொடங்க உள்ளார்கள் என்பதால் எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர்.

    அண்ணாமலை நாகரிக அணுகுமுறையை தவிர்த்துவிட்டு எது வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகிறார். மாணவர்கள் மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தரட்டும்.

    போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது.
    • கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    19.2.2025 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை ஒன்றிய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

    இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர்.
    • மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இ.பி.எஸ்., அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    பாலியல் வன்கொடுமைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இப்பொழுது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருக்கிறது.

    கடந்த அதிமுக ஆட்சியைபோல இல்லாமல் இந்த ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர்.

    இதற்கு முன் மாணவிகள் அச்சம் உணர்வோடு இருந்தார்கள். யாரிடம் சொல்வது, சொன்னால் ஆசிரியர் தனது மதிப்பெண்களை குறைத்து விடுவாரோ என்ற பயம் இருந்தது.

    இப்போது மாணவிகளுக்கு தைரியம் வந்து இருக்கிறது. மாணவிகள் மத்தியில் அச்சம் நீங்கியுள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இ.பி.எஸ்., அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. இ.பி.எஸ்.,க்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது.

    குற்றங்கள் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோமா என்பது தான் முக்கியம். அதனை இந்த அரசு துரிதமாக எடுத்து இருக்கிறது.

    இவ்வாறு கூறினார்.

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.
    • கோ பேக் மோடி இல்லை நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.

    சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, " GET OUT MODI" என பதிவிட்டது தொடர்பாக திமுக ஐடி விங்கிற்கு நாளை காலை 6 மணி வரை கெடு" என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறுகையில், " நீங்க GET OUT MODI என ட்வீட் போடுங்கள்.. நாளை காலை 6 மணிக்கு நான் GET OUT STALIN என எனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுகிறேன். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம்.

    நீங்கள் நாளை காலை 6 மணிக்கு பதிவிடும் ட்வீட்டை விட எனது ட்வீட் அதிக வரவேற்பை பெறுகிறதா இல்லையா என பார்ப்போம். நாளை பாஜகவின் காலம்" என்றார்.

    முன்னதாக, கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.

    அப்போது அவர், " பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம். நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. நீ சரியான ஆளாக இருந்தீன்னா.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. எங்கப்பா முதலமைச்சர்.. தாத்தா ஐந்து முறை முதலமைச்சர்ன்னு நீ சொல்லிப்பாரு பார்க்கலாம்.

    வாயில் இருந்து எங்க தாத்தா ஐந்து முறை முதல்வர்.. எங்கப்பா சிட்டிங் முதல்வர். நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம்." என்றார்.

    • பெண்ணிடம் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலானது.
    • ரோந்து காவலர் ராஜ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

     சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இருவரிடம், 'நீங்கள் தம்பதியா?' என கேட்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, ரோந்து பணியில் இருந்த காவலர் 'நீங்கள் கணவன் மனைவியா?' என கேட்டு மிரட்டியுள்ளார்.

    இதனை சம்பந்தப்பட்ட பெண் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் ராஜ்குமாரை பணியிட மாற்றம் செய்ய காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.
    • உதயநிதி தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.

    சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, " தனியாளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. முடிந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள்" என்று அண்ணாமலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    அண்ணாசாலைக்கு தனியாளாக வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.

    உதயநிதி கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசியிருக்கிறார். தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.

    காலை உணவுத் திட்டம் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பொருட்கள் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது ?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
    • கைதான 5 பேரும் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கட்சிபெருமாள் கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. கடந்த 14-ந்தேதி இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றார்.

    மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டடு அதில் இருந்த 48 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், மேலும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர் பட்டப்பகலிலேயே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.

    இதுகுறித்து வசந்தா உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. சீராளன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களூக்கு சென்று கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன்(வயது 27), மணிக்காளை(29), சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த அழகு பாண்டி(24), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனசிங்(22), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(24) ஆகிய 5 பேர் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் கொள்ளையர்கள் 5 பேரும் மதுரையில் பதுங்கி இருப்பதும் தெரிவந்தது. இதையடுத்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மதுரை சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 37 பவுன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி, 40 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் திருட்டுக்கு உபயோகித்த கார் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரும் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    ×