என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியை படிக்க என்ன தேவை இருக்கிறது ?- அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி
    X

    இந்தியை படிக்க என்ன தேவை இருக்கிறது ?- அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி

    • இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை.
    • இந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்.

    நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் கூறியிருப்பதாவது:-

    இந்தி படிக்க வேண்டிய தேவை என்ன ? இந்தியை படிப்பதால் என்ன பயன் ?

    இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை. இந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்.

    நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது.

    அந்தப் பள்ளி இன்னுமும் செயல்பட கூட தொடங்கவில்லை. எங்களது இடத்தில் பள்ளியை தொடங்க உள்ளார்கள் என்பதால் எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர்.

    அண்ணாமலை நாகரிக அணுகுமுறையை தவிர்த்துவிட்டு எது வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகிறார். மாணவர்கள் மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தரட்டும்.

    போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×