என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
- அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் "ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் "அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000" என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ
அறிவாலயம் தலைவர்கள் காட்டாதது ஏன்?
அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்! என்று கூறியுள்ளார்.
- முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
- வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக இருப்பதுதான் திராவிட மாடல்.
இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை delivery செய்யும் gig ஊழியர்களுக்குக் கழிப்பறை, AC, charging point, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் Scandinavian வடிவமைப்பில் இணையத் தொழிலாளர் கூடம் (lounge) முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு style!
வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் DravidianModel!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அதன்படி, முதலில் ஆடிய கோவை 169 ரன்கள் எடுத்துள்ளது.
கோவை:
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் ஜிதேந்திர குமார் 17 ரன்னும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாலசுப்ரமணியன் சச்சின் 15 ரன்னும், ஆண்ட்ரி சித்தார்த் 20 ரன்னும், மாதவ பிரசாத் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. ஷாருக் கான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
- இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. நடப்பாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
- டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
- கோவை மற்றும் மதுரை அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளன.
கோவை:
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை மற்றும் மதுரை அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளன.
இந்நிலையில், டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகிறது.
- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில்," தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தமிழக மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். இனி அவர்களை நீங்களும், உங்களது கூட்டாளிகளும் ஏமாற்ற முடியாது.
- சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக மக்கள் தக்க பதிலடி தருவதற்கு தயாராக உள்ளார்கள்.
பொதுமக்களிடமிருந்து வாங்கும் மனுக்களில் கூட விளம்பரம் தேடும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம் என்று
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதும், அம்மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுவதும் நடைமுறை. எங்களின் இதய தெய்வங்களான
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர், மாவட்டங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை சென்னைக்குக் கொண்டுவந்து முதலமைச்சரின் தனிப் பிரிவில் அம்மனுக்கள் பிரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.
1991-96 ஆட்சியின்போது மாண்புமிகு அம்மா அவர்கள், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவை கணினிமயமாக்கியதுடன், அம்மா அவர்களே நேரில்
ஆய்வு செய்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை தனி அலுவலராக நியமித்து, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைய நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்கள் 2012-ஆம் ஆண்டு 'அம்மா திட்டம்' என்ற
ஒன்றை அறிவித்தார்கள். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அதிகாரிகள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் ஊராட்சிகளுக்குச் சென்று முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள், வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் போன்ற விண்ணப்பங்கள் முதலானவை ஆய்வு செய்யப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டன.
தொடர்ந்து, 2019-ல் முதலமைச்சராக இருந்தபோது, 'முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்' மூலம் நானும், அமைச்சர் பெருமக்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, சுமார்
5,08,179 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக, தமிழகம் முழுவதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி, பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் திரு. ஸ்டாலின்.
இன்றுவரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டதா, எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன? அந்தக் கோரிக்கைகள் உண்மையாக தீர்க்கப்பட்டனவா? அல்லது ஒப்புகைச் சீட்டு மட்டும் வழங்கப்பட்டதா என்று நான் பலமுறை எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையான புள்ளி விவரங்களை இந்த ஆட்சியாளர்கள் இதுவரை வெளியிடவில்லை.
அந்தப் பெட்டிகளின் சாவிகளை திரு. ஸ்டாலின் தொலைத்துவிட்டாரோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். அன்று
மனு கொடுத்தவர்களிடம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை வழங்கிய திரு. ஸ்டாலின், அதை எடுத்துக்கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து என்னை முதலமைச்சர் அறையிலேயே சந்திக்கலாம் என்று பசப்பு வார்த்தை பேசினார்.
இதுவரை ஒருவர்கூட ஒப்புகைச் சீட்டோடு சென்னைக்கு வந்து விடியா திமுக அரசின் முதலமைச்சரை சந்தித்ததாகத் தெரியவில்லை. ஒருசில மாதங்களுக்கு முன்பு காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, தனது பெண் குழந்தையுடன் கோட்டைக்குச் சென்று முதலமைச்சரிடம் மனு கொடுக்க முடியவில்லை என்று பேட்டி அளித்ததை அனைத்து ஊடகங்களிலும் பார்த்தோம்.
திராவிட மாடல் என்ற பெயரால் எந்தவித கொள்கையும் இல்லாமல், கொள்ளையடிப்பதை ஒரு கலையாகக்கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆட்சியாளர்கள், விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட் மூலம் தமிழகத்தை தொடர்ந்து ஆண்டுவிடலாம் என்ற நினைப்பில், எப்படியெல்லாம் மக்களை வஞ்சிக்கிறார்கள் என்பதற்கு
சில உதாரணங்கள் இதோ.
ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுவதற்குக்கூட – 'முதல்வரின் முகவரித்துறை', 'உங்கள் தொகுதியில் முதல்வர்', 'மக்களுடன் முதல்வர்', 'நீங்கள் நலமா?', 'மக்களுடன் முதல்வர் - நகரம் மற்றும் ஊரகம்' 'மக்களுடன் முதல்வர் - பட்டியலினத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்' என்று பல்வேறு பெயர்களைச் சூட்டி தமிழக மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி மூலம் மனுக்களை வாங்கி சாவியை தொலைத்துவிட்ட விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை மனதில்கொண்டு, மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், வரும் நாட்களில் 'இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெறும் திட்டமிட்ட நாடகத்தை' அரங்கேற்ற உள்ளதாகத் தெரிய வருகிறது.
முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கலர் கலராக காகிதப் பூக்களைப் போல் பல்வேறு பெயர்களைச் சூட்டி, அப்பாவி தமிழக மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வேடிக்கை விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் விளம்பர மாடல் முதலமைச்சர் ஸ்டாலின்.
திரு. ஸ்டாலின் அவர்களே, தமிழக மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். இனி அவர்களை நீங்களும், உங்களது கூட்டாளிகளும் ஏமாற்ற முடியாது.
பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், தொழிலாள தோழர்கள் நசுக்கப்பட்ட போதும், துப்புரவுத் தொழிலாளர்கள் பெயரில் அவர்களுக்குரிய மத்திய அரசின் திட்டங்களை ஒருசிலரே அனுபவிக்கும் போதும், இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் முதன்மை மாநிலம் என்ற பெயரை பெற்ற போதும், 2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போதும், ஏவல் துறை மூலம் ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுத்த போதும் . . . என்று இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு பல்வேறு சுமைகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியபோதும், இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தும் கூட்டணி தர்மம் என்ற பெயரால் பல கட்சிகள் அறிவாலயத்தை சுற்றிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடியதாகும்.
எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா, ரோஜாதான் என்று சொல்வார்கள். அது ரோஜா பூவுக்கு உள்ள பெருமை. அதுபோல், மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஒரு ஆட்சியின் கடமை.
ஆனால், ஒரு திட்டத்திற்கு பல்வேறு பெயர்களைச் சூட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினும், அவரது கூட்டமும் நினைத்தால், அவர்களுக்கு 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக மக்கள் தக்க பதிலடி தருவதற்கு தயாராக உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாதாவரத்திலிருந்து 13/06/2025 மற்றும் 14/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- பயணத்திற்கு www.tristc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
13/06/2025 (வெள்ளிக்கிழமை) 14/06/2025 (சனிக்கிழமை) 15/06/2025 (ஞாயிறு) விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/06/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 385 பேருத்துகளும், 14/06/2025(சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒருர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/06/2025 வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் 14/06/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு உங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 13/06/2025 மற்றும் 14/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,158 பயணிகளும் சனிக்கிழமை 2,652 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,469 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tristc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஓ.பி.எஸ். அணியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
- கூடலூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் தங்களை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்துக் கொண்டனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நேற்றும் ஓ.பி.எஸ். அணியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்ஏ முனியசாமி தலைமையில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜன், திருக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அரிகிருஷ்ணன், கூடலூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் தங்களை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
- நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதை அரசு உணர வேண்டும்.
- விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் வேளாண் கடன் உடனடியாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அடங்கல் சான்றிதழ் மட்டும் பெற்று கடன் வழங்குவது வழக்கமானது என்பதால் தமிழக அரசு விவசாயிகளின் தற்போதைய கஷ்டத்தை, நஷ்டத்தை, வருவாய் இல்லாத நிலையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் என்றால் என்ன என்று தெரியாது.
விவசாய நிலம், தற்காலிக குத்தகை நிலம், கோவில் நிலம், வக்பு நிலம் மற்றும் தனியார் நிலம் போன்ற பல்வேறு வகைப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் வங்கியில் நகைக்கடன், கல்விக் கடன் பெற்று அது சம்பந்தமாக நிலுவை இருந்தால் சிபில் ஸ்கோர் மதிப்பெண் கணக்கிட்டால் கடன் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
எனவே தான் வேளாண் தொழில் சம்பந்தமாக விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் கிடைக்க வேண்டிய விவசாயக் கடன் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உணவுக்கு வித்திடும் விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து ஆறுதல் கூறுவதை தாண்டி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதை அரசு உணர வேண்டும்.
குறிப்பாக விவசாயிகளின் கடன் நிலுவை, சிபில் ஸ்கோர் மதிப்பெண் என எக்காரணத்தையும் கூறாமல், இப்பருவத்தில் விவசாயத்தில் ஈடுபட, கடன் பெற காத்திருக்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் வேளாண் கடன் உடனடியாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜூலை மாதம் 25-ந்தேதி பிறந்த தினம் ஆகும்.
- முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை :
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையேயான மோதல் தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி வாரியாக உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜூலை மாதம் 25-ந்தேதி பிறந்த தினம் ஆகும். அன்றைய தினம் டாக்டர் அன்புமணி நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைபயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்து பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது.
- வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
- விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
டெல்டா பாசனத்ததுக்கான தண்ணீரை நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து நான் வைப்பதற்கு முன், இன்று மேற்கு மண்டல வேளாண் குடி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டபோது என் மகனதில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகியது. அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள்
தமிழ்நாட்டின் வேளாண் துறை மக்கள் எல்லோரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இந்த ஈரோட்டில் ஈர மனதுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கண்காட்சி, கருத்தரங்கை நடத்துவற்கு ஈரோடு மாவட்டத்தை ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்றால் ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சிப்பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டம்.
குறிப்பாக சொல்ல வேண்டும் வேளாண் உற்பத்தியில் மாநிலத்தில் 8-வது இடம்.
வேளாண் துறைக்கு என நிதி நிலை ஒதுக்கீடு செய்துள்ளோம். அதன் பயன்களை எடுத்து சொல்ல வேண்டும் என்றால் 4 நான்கு ஆண்டுகளில் 488 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து சாதனைப்படைத்து உள்ளோம்.
கூட்டுறவு துறையின் மூலம் 81 லட்சம் விவசாயிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் வேளாண் மின் இணைப்பு கொடுக்கு இலக்கு நிர்ணியக்கப்பட்டு 1 லட்சத்து 84 ஆயிரம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரத்துக்கு 26 ஆயிரத்து 223 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் சிலர்தோளில் துண்டுப்போட்டு கொண்டு ஏமாற்றுகிறார்கள். விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.
விவசாயிகளுக்கு அவர்கள் துரோகம் செய்தனர். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதனால் தேர்லில் அவர்கள் தோற்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.






