என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்
- ஓ.பி.எஸ். அணியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
- கூடலூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் தங்களை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்துக் கொண்டனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நேற்றும் ஓ.பி.எஸ். அணியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்ஏ முனியசாமி தலைமையில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜன், திருக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அரிகிருஷ்ணன், கூடலூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் தங்களை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.






