என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காலிக நிறுத்தம்"

    • சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில்," தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    இருப்பினும், விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #ChennaiSalemRoad
    சென்னை

    சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தனர். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையின்போது 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.



    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, இந்த  திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். #ChennaiSalemRoad

    ×