என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை.
- மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன் (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டனர். மகன் வீட்டிற்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் எங்கள் மகன் உங்கள் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி தான் படித்து வருகிறான். அப்படி இருக்கும் போது எப்படி வீட்டிற்கு வருவான் என கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மாணவனை தேடி வந்தனர். நேற்று இரவு பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மாணவர் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றுப் பக்கம் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் மாணவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இன்று காலை போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் மாணவனை தேடி வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியால் மூடப்பட்ட கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்தார். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மாணவனின் பிணத்தை போலீசார் மீட்டனர்.
மகனின் பிணத்தை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். மேலும் மாணவனின் தந்தை மகன் சென்ற இடத்துக்கு செல்கிறேன் என கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது.
- அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் 3 முறை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகா நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை, நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன். ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது. அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன். ஏற்கனவே ஏற்பட்ட தொடர்பை அடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார் என்றார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மற்றும் ஏப்.12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இயற்கையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணி.
- ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூற விமான மூலம் தூத்துக்குடி வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாக பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் கஞ்சா, போதை பொருள் தமிழகத்தில் எங்கிருந்து வருகிறது? அவை இங்கு அதிகம் வருவதற்கு காரணம் குஜராத் மாநில துறைமுகம், முத்ரா துறைமுகம் இந்த 2 துறைமுகம் தான் முக்கியமான துறைமுகம் தான்.
பாகிஸ்தான் எல்லையில் இருக்கக்கூடிய துறைமுகமான முத்ரா துறைமுகத்தின் மூலம் ஆந்திரா வழியாக போதை பொருட்கள் தமிழகம் வருகிறது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்தியா பார்டர் போலீஸ், மத்திய உளவுத்துறை, சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப். போதைப்பொருள் தடுப்பு பிரிவு நார்காடிக் டிபார்ட்மெண்ட் இதெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டுக்குள் போதை பொருள் வருவதை தடுக்க இயலவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதானி துறைமுகத்தில் பல லட்சக்கணக்கான மூட்டை போதை பொருட்கள் பறிமுதல் செய்து வைத்திருந்தார்கள். அதற்கு ஏதாவது எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசை பார்த்து கேட்பாரா? எப்படி கைப்பற்றி வைத்திருந்த போதை பொருட்கள் காணாமல் போய்விட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மீண்டும் கான்லா துறைமுகத்திற்கும் முத்ரா துறைமுகத்திற்கும் மறு விற்பனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறதா என்று எடப்பாடி பழனிசாமி அவர் கூட்டணியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அரசிடம் கேட்க வேண்டும்.
ஒரு காலத்தில் போதை பொருள்கள் விற்பனை செய்யும்போது வழக்குகளை பதிவு செய்யப்படாது. இப்போது போதைப் பொருள்கள் கண்டு பிடித்தால் உடனுக்குடன் வழக்கு தமிழக அரசு, தமிழக காவல்துறை பதிவு செய்கிறது. எடப்பாடி பழனிசாமி செய்த ஆட்சிக்கும், தற்போது நடைபெறும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காகவும், முழுமையான விவரத்தை கேட்டு அறிவதற்காகவும் ஆறுமுகம் மங்கலம் செல்ல உள்ளேன்.
காங்கிரஸ் எப்போதுமே ஆணவ படுகொலை எதிர்த்து தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என கூறி வருகிறது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இயற்கையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணி. கட்சித் தலைவர்களையே இழிவு படுத்தி பேசக்கூடிய பா.ஜ.க.வுடன், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது இயற்கைக்கு எதிரான கூட்டணி. அ.தி.மு.க.வின் கொள்கைக்கு முரணான கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், தமிழக நலனின் அக்கறை உள்ள அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்கள் என்றார்.
பேட்டியின் போது ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தீரன் சின்னமலை படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற விடுதலைப் போராளி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள்!
சென்னை:
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம் என ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற விடுதலைப் போராளி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள்!
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, நம் உரிமைகளில் எவர் கை வைத்தாலும் வெகுண்டெழுவோம் என்ற தன்மான உணர்வை இம்மண்ணில் விதைத்துச் சென்ற வீரப்பெருஞ்சுடரான தீரன் சின்னமலை அவர்களின் புகழ் ஓங்குக! என்று பதிவிட்டுள்ளார்.
- சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களது விசாரணையை தொடங்கினர்.
- ராமச்சந்திரனுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை என்பதால், அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 27) என்பவர் நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு போலீஸ் வேனில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். 20 நாட்களுக்கு மேலாக மதுரை, திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் கோவில் பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களையும் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சிறப்பு தனிப்படை போலீசார் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கடந்த ஜூன் 27 மற்றும் 28-ந் தேதிகளில் அஜித் குமாரை எந்த எந்த இடத்திற்கு யார், யார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர் என்பது குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், போலீஸ் வேனில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.
இந்த வழக்கில் ராமச்சந்திரன் சாட்சியம் முக்கியமாக இருப்பதால் அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் குமாரை பல்வேறு இடங்களுக்கு வேனில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரனுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை என்பதால், அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த விருந்தில் 109 வகையான சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கூட்டணியை மேம்படுத்தும் வகையில் தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தை போல் உணவு வகைகளை வடிவமைத்து பரிமாறப்படுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது இருந்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
இதில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முடிவான நிலையில் இருகட்சியினரும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அதன்படி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற புரட்சி பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இதற்காக மாவட்டம் தோறும் அவர் சென்று பிரசாரம் செய்யும் இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவில் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வந்து சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார்.
இன்று பிரசாரம் எதுவும் இல்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட விருந்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
இந்த இரவு விருந்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் முத்துபலவேசம், தமிழ்செல்வன், சித்ராங்கதன், விஸ்வை ஆனந்தன் உள்பட தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, ராஜலெட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விருந்துக்காக நயினார் நாகேந்திரன் வீட்டில் சுமார் 10 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் பல வண்ண விளக்குகள், இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் 109 வகையான சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெஜ் சூப், முருங்கைக்காய் சூப் உள்ளிட்ட 4 வகை சூப், சாலட், குழிப்பனியாரம் உள்பட 9 வகை ஸ்டாட்டர்ஸ், 3 வகை பர்பிக்யூ, 5 வகை சாட் உணவுகள், திருநெல்வேலி அல்வா, காசி அல்வா, பலாப்பழ மைசூர்பாக், பால் கொழுக்கட்டை உள்ளிட்ட 11 இனிப்பு வகைகள், 3 வகை போளி, வேக வைத்த 8 வகை உணவுகள், 4 ரொட்டி வகைகள், 8 வகை அமரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், 8 வகையான சைடு டிஷ், 6 வகை பபே வகைகள், 15 வகை தோசைகள், 17 வகையான ஐஸ்கிரீம், 7 வகையான இயற்கை பழவகை ஜூஸ்கள் உள்பட 109 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன.
கூட்டணியை மேம்படுத்தும் வகையில் தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தை போல் உணவு வகைகளை வடிவமைத்து பரிமாறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே ஒற்றுமை பலமாக இருப்பதை நிரூபிக்கும் வகையிலும், 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே ஒரு நெருக்கத்தையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்த விருந்துக்கு நயினார் ஏற்பாடு செய்துள்ளார்.
தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசனையும் நடத்தப்படுகிறது.
- ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது.
- ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை, நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன்.
ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது. அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன். ஏற்கனவே ஏற்பட்ட தொடர்பை அடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார் என்றார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 2 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது.
- தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது. பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது.
தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான முதலாம் செமஸ்டர் வகுப்புகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது.
முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
- மதன் பாப் அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியவர்.
- கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர் என்றார்.
சென்னை:
சினிமா குணச்சித்திர நடிகர் மதன் பாப் (71), சென்னையில் காலமானார்.
இந்நிலையில், மதன் பாப் மறைவுக்கு தே.மு.தி.க. இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டன் உடன் இணைந்து ஆனஸ்ட் ராஜ், தமிழ்செல்வன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர், கேப்டனின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒரு மனிதர். நகைச்சுவை உணர்வோடு பேசி அனைவரையும் மகிழ்விப்பவர். அவரது இழப்பு திரை உலகிற்கே பேரிழப்பு, அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும், குடும்பத்தாருக்கும் தே.மு.தி.க. சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
- கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
- இதில் பேசிய சுருதிஹாசன், லோகேஷ் அமைதியாக செயல்படக்கூடிய ஒரு இயக்குனர் என்றார்.
சென்னை:
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகை சுருதிஹாசன் பேசியதாவது:
இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ரஜினி (சாரு)க்கு நன்றி.
கூலி படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ப்ரீத்தி என்ற கேரக்டரை கொடுத்ததற்கு நன்றி.
என் அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி.
அந்தப் படத்தில் இருந்து நான் உங்கள் (லோகேஷ்) ரசிகையாகி விட்டேன்.
லோகேஷ் அமைதியாக செயல்படக்கூடிய ஒரு இயக்குனர்.
அமீர்கானுடன் நடித்ததும் பெருமையாக இருக்கிறது.
அனிருத்தின் இளமைக் காலத்திலிருந்து அவரை பார்த்துவருகிறேன். உங்களுடைய ஸ்பெஷலான பின்னணி இசை படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது என தெரிவித்தார்.
- கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
- இதில் பேசிய ரஜினி, லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் உண்மையான ஹீரோ என்றார்.
சென்னை:
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் உண்மையான ஹீரோ.
ஒரிஜினால் ஆக நான் வில்லன்மா. எத்தனை நாள் தான் நான் நல்லவனாக நடிப்பது? வெங்கட் பிரபு அஜித்துக்கு எழுதிய டயலாக் போலவே, நாகார்ஜுனா கேரக்டர் பண்ணி இருக்காரு.
எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனா அவர் மனசுல பட்டதை சொல்லிட்டு போயிருவாரு. மனசுல பட்டதை நேரடியாக சொல்லுறவங்களை நம்பலாம். ஆனா மனசுல் வச்சுக்கிட்டு வெளியில் எதுவும் காட்டாதவங்களை நம்ப முடியாது.
நான் 1950 மாடல், லட்சம் கிலோமீட்டர் ஓடி இருக்கிறேன்.பார்ட் எல்லாம் உடலில் மாற்றி இருக்கிறார்கள். எனவே, என்னை பார்த்து ஆட வையுங்கள் என டான்ஸ் மாஸ்டரிடம் கூறினேன்.
இந்தப் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும் என தெரிவித்தார்.






