என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
    • மேட்டூர் அணையில் தற்போது 93.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    அதன்படி இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.73 அடியாக குறைந்து காணப்பட்டது. மேலும் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள்.
    • எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது.

    மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள். ஒரு சமூகத்தினர் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றும், ஒரு சமூகத்தினர் இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள்.

    * எங்கள் நிலைப்பாடு எந்த தாத்தா பெயரும் வேண்டாம். எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர் வைக்க வேண்டும். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

    * சாதாரண குடிமகளான கண்ணகி கால் சிலம்பை உடைத்தபோது, அரசவையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நினைத்தானே அவன் பெயர் வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு பெருமை, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.

    * நீங்கள் வைப்பதாக இருந்தால் நான் போராடி பாண்டிய நெடுஞ்செழியனின் பெயரை வைக்க வேண்டும் என்று சண்டை போடுவேன். இல்லையென்றால் நான் வந்தால் வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
    • காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு நேற்று 12 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும்.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல்-கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 6 மின்சார ரெயில்கள் முழுவதும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் மற்றும் மின்சார ரெயில் ஆகியவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு சூலூர்பேட்டை புறப்பட்டு செல்லும் ரெயில் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் ரெயில்களால் பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பயணிகள் சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது. இன்று இரவு 10.35, 11.20 மற்றும் நாளை அதிகாலை 4.15 மணி, 4.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி, ஓடி உழைத்து 96,000 கிராமங்களுக்கு சென்று பா.ம.க.வை உருவாக்கி உள்ளேன்.
    • அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கூறிய போதும் அதனை அன்புமணி மதிக்கவில்லை.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் இருந்து டாக்டர் அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறுகையில்,

    * தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கமளிக்கவில்லை.

    * கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் பா.ம.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

    * நான் இன்றி அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் வளர்ந்திருக்க முடியாது.

    * பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனியாக கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம்.

    * கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி, ஓடி உழைத்து 96,000 கிராமங்களுக்கு சென்று பா.ம.க.வை உருவாக்கி உள்ளேன்.

    * அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கூறிய போதும் அதனை அன்புமணி மதிக்கவில்லை.

    * பல்வேறு தரப்பினர் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அன்புமணிக்கு இல்லை.

    * பிள்ளையாகவே இருந்தாலும் எனது கட்சிக்கு உரிமை கொண்டாட முடியாது.

    * அன்புமணி ஆதரவாளர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன்.

    * இரா. என்ற இன்சியலை தவிர ராமதாஸ் என்ற பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது.

    * அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நீக்கியது கட்சிக்கு பின்னடைவு இல்லை.

    * என்னோடு 40 முறை பேசியதாக கூறியது பொய், அன்புமணி பேசுவதெல்லாம் பொய் என்றார்.

    • மதுரை விமான நிலையத்தில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
    • கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது.

    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மதுரை விமான நிலையத்தில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    * எடப்பாடி பானிசாமி அரசியல் செய்வதை சுட்டிக்காட்டினேனே தவிர, தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    * எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    * கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது என்றார்.

    இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு என உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு,

    எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது உண்மைதான். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து சுலபமாக வெற்றி பெற்றது என்றார். 

    • விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.
    • த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.

    திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 6-ந்தேதி அனுமதி கோரி மனு அளித்த நிலையில் விஜய் பிரசாரம் குறித்து பேச அழைப்பு விடுத்தும் த.வெ.க. நிர்வாகிகள் செல்லவில்லை என்றும், த.வெ.க. நிர்வாகிகள் பேசாததால் தற்போது வரை பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.

    தற்போது வரை அனுமதி அளிக்கப்படாததால் விஜய் பெரம்பலூர் செல்வாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    • விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம்.
    • இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.

    அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்க ராமதாஸ் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் இன்று அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,

    * இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை.

    * தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கமளிக்கவில்லை.

    * விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம்.

    * இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.

    * ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையில் அடிப்படையில் பா.ம.க. செயல்தலைவர் பதவி உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்புமணியை நீக்குகிறேன் என்றார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன்.
    • சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

    இந்நிலையில் வேதமூர்த்தி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், எனது மருமகன் திரு. சபரீசன் அவர்களின் தந்தையார் திரு. வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    திரு. வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் திரு. சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் உச்சத்தில் விற்பனையான தங்கம் விலை நேற்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-09-2025- ஒரு கிராம் ரூ.140

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    07-09-2025- ஒரு கிராம் ரூ.138

    06-09-2025- ஒரு கிராம் ரூ.138

    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர்.
    • நயினார் நாகேந்திரனுடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர்.

    தமிழகத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர்.

    கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்றும், அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.

    இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர்.

    சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சபரீசன்- செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் காலமானார்.

    வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. அண்மையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

    ×