என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை:
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை போக்குவரத்துத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,785-க்கும் சவரன் ரூ.46,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
- ஒரு குடும்ப நலனுக்காக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
- இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்க கூடாதோ அப்படியெல்லாம் தான் இருக்கிறது. ஊழல், குடும்ப ஆட்சியில் திளைத்து, ஒரு குடும்ப நலனுக்காக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசாங்கம் கடந்த 33 மாதங்களாக கதை, திரைக்கதை, வசனமாக நடக்கிறதே தவிர மக்களுக்கான அரசியலாக இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வெளிநாட்டு பயணம் சென்றும் ஒரு ரூபாய்கூட முதலீடு வரவில்லை.
உத்தரபிரதேசம் ரூ.33 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில் தமிழகம் ரூ.6.60 லட்சம் கோடியை பெற்றுள்ளதாக கூறுகிறது. அதிலும் முதலீடு வந்து சேரவில்லை.

நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்துள்ளார்கள். தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று கூறிவிட்டு நிதி நிலை அறிக்கையில் 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கொடுத்துள்ளதாக கூறி உள்ளார்கள்.
இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.
பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு பயந்து இரண்டு பங்காளி கட்சிகளும் (தி.மு.க.-அ.தி.மு.க.) ரகசிய கூட்டணி வைத்து உள்ளன.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
- 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
- சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.
- 100 வணிக நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 31-ந் தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் முடிகிறது.
அதனால் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 15 மண்டலங்களிலும் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் 4 லட்சம் வணிக கட்டிடங்கள், 8 லட்சம் வீடுகள் என மொத்தம் 12 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
இந்த நிதியாண்டிற்கு ரூ.1600 கோடி சொத்து வரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் இதுவரையில் ரூ.1,296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.300 கோடி இன்னும் 40 நாட்களில் வசூலிக்கப்பட வேண்டும்.
சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
100 வணிக நிறவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது அவர்களின் வணிக கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டம் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன.
எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரியை செலுத்தினால்தான் அடிப்படையான வசதிகளை செய்ய முடியும். மார்ச் 31-ந் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே சொத்துவரி செலுத்தி மேல் நடவடிக்கை மற்றும் அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது.
- 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது.
தாம்பரம்:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தொடங்கியது. அப்போது நடைபயண பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே அண்ணாமலை பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் மோசமாக இருந்த இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு, நேர்மையான ஆட்சி தொலைநோக்கு பார்வையுடன் கொண்ட திட்டத்தால் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பா.ஜனதாவின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024-2028-ம் ஆண்டுகளில் இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாறும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பா.ஜனதா. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் மாநில அரசு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்பதே இந்த பட்ஜெட்டில் உள்ளது.
உள்ளூர் மக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 33 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும், பணிகளும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக 20 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கனவு உலகில் வாழும் முதல்வர் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், புற்றுநோய் ஏற்படுவதால் வண்ண பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்துள்ளார். அதைபோல தமிழக அரசு டாஸ்மாக் கடையில் சத்து டானிக் விற்கிறார்களா? இதற்கு ஏன் தடை விதிக்கவில்லை, மதுவுக்கு தடை விதிப்பார்களா?.
60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி மூலம் 10 ஆயிரத்து 600 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மத்திய அரசு பல கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கலந்து கொண்ட ஏராளமான பா.ஜ.க.வினர் அண்ணாமலையை மலர் தூவி வரவேற்றனர். பொதுமக்களை பார்த்து அண்ணாமலை கையசைத்து பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து சென்னை தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் வந்தனர்.
- தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
- மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது.
இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்த சித்தர்பீடத்தில் நேற்று தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் (வயது 36), ஆசிரியை ருச்சென் (30) ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், அவர்கள் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழிக்கு வந்த ருச்சென்- யோங்சென் ஜோடிக்கு ஒளிலாயம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
முன்னதாக மணப்பெண் ருச்சென் தமிழ் முறைப்படி பட்டுச்சேலை, மாலை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். இதேபோல மணமகன் யோங்சென்னும் பட்டு வேட்டி, மாலை அணிந்து மணமேடைக்கு வந்தார். மணமேடையில் யாகம் வளா்க்கப்பட்டு தமிழ் முறைப்படி மந்திரங்கள் கூற மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.
அப்போது அவர்களை சூழ்ந்து நின்ற நண்பா்கள், மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினா். பின்னர் மணமக்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நண்பர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
- பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகைக்கு என வாழ்த்துகள்.
சென்னை:
டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற பா,ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, விமானத்தில் சென்னை திரும்பி வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
டெல்லியில் 2 நாள் பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2047-இலக்கு வளர்ச்சி அடைந்த பாரதம். எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் ஆகிய 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு தீர்மானமாக ராமர் கோவில் கட்டிட திறப்புக்கு சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு நன்றி சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பாக நேரம் வரும்போது பேசுவோம். அதற்கு இன்னும் நேரம் உள்ளது. வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகைக்கு என வாழ்த்துகள். அவரது பணி சிறக்கட்டும்.
டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 11 ஆயிரத்து 700 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். உணவு இடைவெளியில் டீ சாப்பிடுவதற்கு கூப்பிட்டார்கள். அப்போது நீங்கள் எங்களுடன் வந்து அமர வேண்டும் என்று கேட்டதால் அவர்களுடன் தரையில் அமர்ந்து பாரத் மண்டபத்தில் பிரதமர் பேசிய உரையை கேட்டேன்.
பா.ஜனதாவில் இது சாதாரணம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமாலும் அமரலாம். பிரதமர் மோடியிடம் நேரடியாக சென்று பேசலாம். அருகில் அமர்ந்து சாப்பிடலாம். நானும் சாதாரண தொண்டன் தான்.
2024 தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட திருமாவளவன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சப்பக்கட்டு கட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது.
- பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உடன் இருந்தார்.
அதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பேரிடர், கொரோனா என பல கட்டங்களை கடந்து பல புதிய திட்டங்களால் தமிழகத்தை உயர்த்தி வருகிறது. இந்த பட்ஜெட் சிறப்பானது.
பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள். மத்திய அரசின் வீடு வசதி திட்டம் குளறுபடியானது. இதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.
விஜயதாரணி 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வக்கீல். பா.ஜனதா எப்படி என்றால் பிள்ளை பிடிக்கும் கட்சி. யார், யார் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்கலாமா? என்று வலைவீசுவார்கள். அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் விஜயதாரணி சிக்க மாட்டார். அவர் புத்திசாலி.
ஒரு வழக்கு சம்பந்தமாக, டெல்லி போய் இருக்கிறார். உடனே பா.ஜனதா தலைவர்கள் அவரை சேர்த்துக்கொள்ளலாமா? என்று துடிக்கிறார்கள். அது நடக்காது. அவருக்கு (விஜயதாரணி) காங்கிரஸ் கட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளது. இன்னும் செய்ய தயாராக இருக்கிறது.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
இதற்கிடையே செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத் முன்னிலையில் நாளை (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்.
- நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்வோம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது:-
நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'பொதுக்கூட்டங்கள்!
வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி!
2024 தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; இந்திய கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
- அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.
காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (எ) அன்வர் உசேன், மதம் மாறி சையத் அலி பாத்திமா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென மரணமடைய, அவரது உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்ய தன்னிடம் ஒப்படைக்கோரி முதல் மனைவி சாந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.
இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.
ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்ய போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் சென்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சையத்அலி பாத்திமா தரப்பினர் கூறுகையில், ஏற்கனவே சாந்தியை விவகாரத்து செய்து விட்டார். இதனால் நாங்கள் தான் அடக்கம் செய்வோம் என்று கூறினார்.
ஆனால் சாந்தி தரப்பினர் கூறுகையில், விவகாரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இப்பிரச்சனையில் காவல் துறையினர் முடிவெடுக்க முடியாமல், உடலை கைப்பற்றி காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.
கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்று கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- அ.தி.மு.க.வின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள்.
- அ.தி.மு.க.தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வௌியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு தாக்கல் செய்திருக்கிறது.
இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'கனவு பட்ஜெட்; மக்களுக்குப் பயன் தராது' எனப் புலம்பியிருக்கிறார்.
'தி.மு.க. அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது' எனச் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள்.

அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்' என வாக்குறுதி அளித்திருந்தீர்கள்.
அந்தத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அம்மையார் ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை.
நடப்பது மக்களாட்சியா... இல்லை மன்னராட்சியா எனச் சந்தேகம் கொள்ளும் வகையில் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். எதார்த்தத்துக்கு வராமல் ஜெயலலிதா அவர்களையும் பழனிசாமி அவர்களையும் குளிர்விப்பதற்கே தமிழ்நாடு சட்டமன்றம் பயன்பட்டது.
2011 - 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020 - 2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.
'கடன்' என்ற சொல்லுக்குக் 'கடமை' என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அ.தி.மு.க. அரசின் சாதனை.
'ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது' என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை.
ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
'வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு' என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. பத்தாண்டு அ.தி.மு.க. அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. தி.மு.க. அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?

2014-ல் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி அவர்களின் வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்?
பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி அவர்கள், அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?
பழனிசாமி அவர்கள் அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். "அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க. ஆட்சியில் வருகிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.
அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும்.
'தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது' எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






