என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விஜய் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?
- அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த சம்பவத்தை விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து விசாரணை நடத்தி ஆறுதல் கூறினர்.
இந்த நிலையயில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வருக்கு 12 கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று, நமது @BJP4India-வினால் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவுடன் கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க இயலவில்லை. முழுமையாகக் கலந்துரையாடி, இந்தப் பிரச்சனையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகு, மனதில் எழுந்த கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முன்வைக்க விரும்புகிறேன்.
1. முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்?
2. விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?
3. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா விமான சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 லாக்-அப் மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்துவது ஏன்?
4. திமுகவினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். கூட்ட நெரிசலுக்குப் பிறகு, உண்மையை மறைக்க திமுக அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல்பட்டது ஏன்?
5. 25 பேர் மீது வழக்கு பதிந்து, பத்திரிகையாளர் பெலிக்ஸ் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாகத் திமுக அரசு முடக்குகிறது?
6. 10,000 பேர் தான் கூடுவர் என்று தவறாக கணித்ததாக விஜய் மீது குற்றம் சாட்டும் திமுக அரசின் காவல்துறை, கூட்டத்தைச் சரியாக மதிப்பிடாதது ஏன்?
7. விஜய் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?
8. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பது உறுதி. உண்மையிலேயே எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்? பெரும் அரசியல் பேரணி நடக்கும் வேளையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரூரில் இல்லாதது ஏன்?
9. இவ்வளவு குறைபாடுகள் அரசுத் தரப்பில் உள்ளன என்பது நிரூபணமான பின்பும், ஏன் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இதில் ஏதேனும் உண்மைகள் புதைந்திருந்தால் அவை அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சமா?
10. அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, திமுகவின் சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைக்கும் விதமான கருத்துகளை விசாரணை ஆணையத் தலைவர் வெளியிடுவது ஏன்?
11. விசாரணை நடைபெறும் நிலையில் அது குறித்து பொது அறிக்கைகளை வெளியிட வருவாய் செயலாளருக்கு அதிகாரம் அளித்தது யார்? இது விசாரணையின் நடுநிலைத்தன்மையை சமரசம் செய்யாதா? திறமைமிக்க அரசு அதிகாரிகளைத் திமுகவின் கைப்பாவைகளைப் போல பயன்படுத்துவது சரியா?
12. அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே இத்துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகத் தெரிகிறது. எனவே தான், ஒரு நபர் ஆணையத்தின் மீது எந்த நம்பிக்கையுமின்றி சிபிஐ விசாரணை வேண்டுமெனக் கோருகிறோம். கோரிக்கையைப் பரீசீலிப்பதோடு, தமிழக மக்கள் சார்பாக நான் முன்வைத்த கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று மத்திய மேற்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா- வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அக்டோபர் 03-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 3-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
- நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் நிகழ்ச்சி ஒத்திவைப்பு.
விஜயின் அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துளளது.
அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி, கடலூரில் நடைபெற இருந்த விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன.
- 40 சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.
சுங்கச்சாவடி கட்டணம் என்பது, நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் ஆகும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிர்ணயிக்கும் இந்த கட்டணங்கள், ஆண்டுதோறும் வாகனங்களின் வகையைப் பொறுத்து உயர்த்தப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.
சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே சூரப்பட்டில் இன்று முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
* கார், வேன், ஜீப்பிற்கு மாற்றமின்றி ரூ.75 ஆக தொடரும்.
* கார், வேன், ஜீப்பிற்கு ரிட்டர்ன் கட்டணம் ரூ.115-லிருந்து ரூ. 110 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* பேருந்து, லாரிகளுக்கான கட்டணம் ரூ.255-லிருந்து ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
- சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்!
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது:-
* சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
* சாலை பாதுகாப்புக்காக சாலையில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம்.
* அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
* சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று தெரிவித்துள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
* ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா?
* 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று அவர் விமர்சனம் செய்தார்.
- தவறு நடந்தால் எந்த இயக்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
- விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* த.வெ.க. தலைவர் விஜயுடன் வந்தவர்களும் கூட்டத்திற்குள் வந்ததே நெரிசலுக்கு காரணம்.
* சம்பவம் நடந்தபோது நான் கட்சி அலுவலகத்தில் தான் இருந்தேன்.
* நடந்த துயரத்திற்கு பொறுப்பேற்காமல் அரசு மீது மடைமாற்றி விடுகின்றனர்.
* தவறு நடந்தால் எந்த இயக்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
* உண்மை கண்டறியும் குழு மணிப்பூர் சென்றிருந்தால் ஏற்புடையதாக இருக்கும்.
* கட்சி அலுவலகத்தில் இருந்து அமராவதி மருத்துவமனை அருகில் தான் உள்ளது.
* விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
* விஜய் பேச ஆரம்பித்தன 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டுள்ளது.
* கூட்டத்திற்கு 3 மணிக்கு அனுமதி பெற்று விட்டு 12 மணிக்கு உரையாற்றுவதாக அறிவித்தது ஏன்?
* த.வெ.க. தலைவர் விஜய் கட்டுக்கடங்காத கூட்டத்திற்குள் பேருந்தில் சென்றது ஏன்?
* கூட்டத்திற்கு வரும்போது திடீரென த.வெ.க. தலைவர் பேருந்துக்குள் சென்றது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.
- நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்ட நெரிசல் காரணமாக த.வெ.க. தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்கு சென்றனர்.
* தொண்டர்கள் சென்ற காரணத்தால் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது.
* ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.
* கூட்டம் நடக்கும் 500மீ முன்னர் விஜய் பேருந்தின் உள்ளே சென்றது ஏன்?
* விஜயின் கவனத்தை ஈர்க்க அந்த கட்சி தொண்டர்களே செருப்பை எறிந்திருக்கலாம்.
* அரசியல் தலைவர்கள் முன்சீட்டில் அமர்ந்து கை காட்டுவது வழக்கம்.
* விஜய் பிரசார பகுதிக்கு வந்ததும் வாகனத்தின் முன்பகுதி லைட் அணைக்கப்பட்டது.
* எல்லா நாளும் வாகனம் ஓட்டும் எனக்கு இன்று மட்டும் விபத்து ஏன் ஏற்பட்டது என்பது போல் உள்ளது.
* தண்ணீர் கேட்டபோது கடைகள் பூட்டியிருந்ததால் தி.மு.க.வினர் கைவசம் இருந்த பாட்டில்களை கொடுத்தோம்.
* காவல்துறையினர் அறிவுரையை த.வெ.க.வினர் கேட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.
* நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.
* த.வெ.க. கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த எந்த ஆம்புலன்ஸ்களும் செல்லவில்லை.
* கூட்டநெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க.வினர் உதவ முன்வரவில்லை.
* த.வெ.க. கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம்.
- த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்த 27-ந்தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் என்பது கொடுமையானது.
* யாராலும் எந்த சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாத துயர சம்பவம்.
* தமிழ்நாட்டில் எங்கும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
* கரூர் துயர சம்பவத்தை அரசயலாக பார்க்காமல் மனித நேயத்துடன் அணுக வேண்டும்.
* கரூரில் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறேன்.
* ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம்.
* தற்போதைய நிலவரத்தில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* அனைவருக்குமான பொது நபராக மக்களின் அன்பை பெற்றுள்ளேன்.
* த.வெ.க. கேட்ட இடங்களில் அதிகம் பேர் நிற்க முடியும் இடம் வேலுசாமிபுரம்தான்.
* எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்து இடத்தை தேர்வு செய்வது கட்சிகளின் பணி.
* லைட் ஹவுஸ் கார்னரில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் தான் நிற்க முடியும்.
* கூட்டத்திற்கு வருவபவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும்.
* தொண்டர்களுக்கு தேவையான குடிநீரை அளிக்க வேண்டியது கட்சிகளின் பொறுப்பு.
* த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா?
* லைட் ஹவுஸ் கார்னரில் அனுமதி கொடுத்திருந்தால் மாநகர் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
* விஜய் பிரசாரம் 4 மணிக்கு நடந்திருந்தால் கூட இந்த பெருந்துயரம் நடந்திருக்காது. விஜய் குறித்த நேரத்தில் வந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
- புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தனர். மேலும் கரூர் துயர சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க.வின் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம் என அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசன் முத்தமிழறிஞர் கலைஞரின் கதை வசனத்தில் உருவாகிய 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்த் திரைப்பட உலகில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இந்தி, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
நடிகர் திலகத்தின் 98-வது பிறந்தநாள் இன்று திரையுலகினராலும், அவரது குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாளான இன்று சென்னை அடையாறு, தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் ஆகியோர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை போரூரில் நாளை மறுநாள் (03.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
போரூர்: காரம்பாக்கம், கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர், மதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிரமணார் தெரு.






