என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்பின் பவுலிங் போட்டி"

    • போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.
    • இறுதி ஆட்டம் "பேக்கர் வடிவத்தில் (Baker Format)" நடைபெற்றது

    DAVe BABA VIDYALAYA தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ் டென்பின் பவுலிங் தொடர் 2025 போட்டியில், டெல்லிஷார்க்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்த போட்டி லெட்ஸ் பவுல், தோரைய்ப்பாக்கம், சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (TNTBA) இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்பின் (Tenpin Bowling Federation of India) ஆதரவுடன் ஏற்பாடுசெய்தது.

    இறுதி ஆட்டம் "பேக்கர் வடிவத்தில் (Baker Format)" நடைபெற்றது, இது இரண்டு ஆட்டங்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. டெல்லி ஷார்க்ஸ் அணியின் வீரர்கள் — த்ருவ் சார்தா, பள்குனாரெட்டி மற்றும் சுனில் சர்மா — ஸ்ட்ரைக் சிண்டிகேட்சென்னை (சோபன் டி., கணேஷ் என்.டி., குருநாதன்) அணியை வெறும் 12 பின்களால் (375–363) வென்று பட்டம் வென்றனர்.

    முதல் ஆட்டத்தின் முடிவில், டெல்லி ஷார்க்ஸ் அணி 3 பின்களால் (170–173) பின்தங்கியிருந்தது. ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் அவர்கள் 205 பின்கள் விழ்த்திதிடீர் திரும்புபாடு கண்டனர். கடைசி ஃப்ரேமில் கணேஷ்என்.டி. ஸ்ட்ரைக் அடிக்க தவறியதால், டெல்லி ஷார்க்ஸ் அணி வெற்றியை உறுதி செய்தது!

    அரையிறுதி 1:
ஸ்ட்ரைக் சிண்டிகேட் சென்னை, டிரிபிள் த்ரெட் சென்னை(தீபக் கோத்தாரி, பார்த்திபன், ஆனந்த் ராகவ்) அணியை403–369 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    அரையிறுதி 2:
டெல்லி ஷார்க்ஸ் அணி, சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் (ஆனந்த் பாபு, சபீனா அதிகா, அபிஷேக் டி.) அணியை 364–357 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    டிரிபிள் த்ரெட் சென்னை அணி மொத்தமாக மூன்றாம்இடத்தை பெற்றது. இந்த நான்கு நாள் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.

    சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4 ஆட்டங்களைக்கொண்ட 3 பிளாக்குகளில் அதிக சராசரியை பெற்றதற்காக சிறப்பு பரிசை வென்றது.

    • தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி டென்பின் பவுலிங் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
    • போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    இரண்டாவது தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி, ஐதராபாத்தில் உள்ள கேம் எக்ஸ்ட்ரீம் பவுலிங் சென்டரில் நடைபெற்றது. தெலுங்கானா டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் நடத்திய இத்தொடரில் தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி டென்பின் பவுலிங் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

    ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் இரண்டு போட்டிகளில் மொத்த பின்ஃபால் அடிப்படையில், முதலிடம் பெற்ற தமிழக வீரர் மகிபால் சிங் தனது சக தமிழக 7வது நிலை வீரர் கணேஷ் என்.டி-யுடன் மோதினார். இந்த போட்டியில் மகிபால் சிங், 52 பின்கள் வித்தியாசத்தில் (405-353) கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் தற்போதைய தேசிய சாம்பியன் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமதி நள்ளபண்டு, கர்நாடகாவின் ஹிதாஷா சிசோடியா மற்றும் தமிழ்நாட்டின் சபீனாஅதீக்காவை 3 பின்களின் வித்தியாசத்தில் (298 - 295 - 280) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்த தொடரில், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 94 வீரர், வீராங்கனைகள் (82 ஆண்கள் மற்றும் 12 பெண்கள்) பங்கேற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    ×