என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
    X

    சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு

    • விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
    • விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.

    104 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 109 பேர் இருந்தனர். ஓடு பாதையில் ஓடத் தொடங்கியபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

    இதையடுத்து அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் எந்திர கோளாறை சரிசெய்ததும் பின்னர் மதியம் 12 மணிக்கு விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×