என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.
    • வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

    தங்கம், வெள்ளி, அலைபேசி உள்ளிட்ட விலை உயர் ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்கூட அன்றாடம் மக்களின் பசியைப்போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வேளாண்மையை முற்று முழுதாக அழித்துவிட்டு '2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம்' என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகாருக்கு 26000 கோடிகளும், ஆந்திராவிற்கு 15000 கோடிகளும் ஒதுக்கியுள்ள இந்நிதிநிலை அறிக்கை மூலம், இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா? நாட்டிலேயே ஆந்திராவில் மட்டும்தான் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளதா? தமிழ்நாட்டில் இல்லையா? இந்தியாவிலேயே அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்? தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி, வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாததைக் கண்டித்து 'வரிகொடா' இயக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு வேறுவழியில்லை எனும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது பாஜக அரசு.

    ஒட்டுமொத்தமாக பாஜக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

    • பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்.
    • இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியானது.

    இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்.

    ஏற்கனவே அவர் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர். இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    இதில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவரது டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று மாலை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.
    • நாளை நமது எம்பிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

    மத்திய பட்ஜெட் குறித்து முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

    மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தின் தேவைகளை முன்பே மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தோம். மெட்ரோ ரெயில் தமிழகத்திற்கான ரெயில்கள் குறித்து கேட்டிருந்தோம். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கேட்டிருந்தோம்.

    மைனாரிட்டி பாஜக அரசை மெஜாரிட்டி பாஜக அரசாக மாற்றி மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் குறித்த 2 மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆய்வு செய்து சென்றனர். அதன் பின்னரும் தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்பட வில்லை. மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.

    நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்க போகிறேன்.

    தமிழகத்தின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளை நமது எம்பிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை.
    • பட்ஜெட் மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது.

    ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.

    அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது.

    நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது.

    சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்திலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியதுதான்.

    ஆனால், இன்று உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மூன்றாண்டுகளுக்கும் முன்பாக ஒன்றிய அரசு அறிவித்த நிலையிலும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக எந்தவொரு நிதியும் இதுவரை வழங்கவில்லை. இது, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் செயல்பாட்டினைப் பெரிதும் பாதித்து, சென்னை மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

    ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கென எந்தவொரு புதிய ரெயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ இடம்பெறவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

    பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு வீட்டிற்கான மதிப்பீட்டினை உயர்த்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது, நகர்ப்புரப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளில், ஒன்றிய அரசின் பங்கு 1.5 இலட்சம் ரூபாயாகவும், இதில் மாநில அரசால் சுமார் 12-14 இலட்சம் ரூபாய் ஒரு வீட்டிற்கு செலவிடப்படுகிறது.

    எனவே, ஒன்றிய அரசின் பங்கினை உயர்த்தாமல், வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவே அமையும். திட்டத்திற்கு பிரதமரின் பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதுமானதல்ல. அதற்கேற்றால்போல நிதியும் வழங்கப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.

    ஒன்றிய அரசு அறிவித்த முக்கியத் திட்டங்களைப் பார்க்கையில், நமது மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தின் நகல்போலத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக– ஆயிரம் தொழிற்பயிற்சி மையங்கள் மேம்பாட்டுத் திட்டம், பணிபுரியும் மகளிருக்கான (தோழி) விடுதிகள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், நீரேற்று புனல் மின் உற்பத்திக் கொள்கைகள் போன்றவை தமிழ்நாடு அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் ஏற்கெனவே இடம்பெற்றவை.

    குறிப்பாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு, நாடு முழுவதும் 20 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு ஆண்டிற்கு 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்றிய நிதியமைச்சர் தன்னுடைய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களை நகல் எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், இரவல் வாங்கிப் பயன்படுத்தியவர், நன்றிக்கடனாக தமிழ்நாட்டிற்குப் பெரும் திட்டம் ஒன்றுகூட அறிவிக்காமல் விட்டது ஏன்?

    ஒன்றிய அரசு, மாநிலப் பட்டியலில் உள்ள முத்திரைத்தாளின் கட்டணத்தைக் குறைக்குமாறு அறிவித்துள்ளது. எனினும் இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு எந்தவொரு அறிவிப்பும் இல்லை. எனவே, ஒன்றிய அரசானது, முத்திரைத்தாள் கட்டணக் குறைப்பினை ஈடுசெய்வதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்கு ஏற்பட்டுள்ள 20,000 கோடி ரூபாய் இழப்பிற்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது, நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல், வெறும் பெயரளவிற்கு வருமானவரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாக வரிக்குறைப்பின்றி இருந்துவந்த நிலையில் வெறும் 17,500 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதும், இக்குறைப்புகூட புதிய வரிமுறையில் மட்டுமே செய்யப்பட்டு, பழைய முறையில் எவ்வித குறைப்பும் அளிக்கப்படாததும் மத்தியதரக் குடும்பங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்திற்கு வழங்கிட வேண்டுமென்று மீண்டும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • விசாரணை நடத்த மேலும் 12 நாள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.
    • 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர் படுத்தப்பட்டார்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தியது. அப்போது 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில், ஜாபர் சாதிக்கிடம் முழுமையாக விசாரணை முடியவில்லை. இதனால் விசாரணை நடத்த மேலும் 12 நாள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

    இதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன் ஜூலை 23-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிற்கு ஏற்கனவே ஜூலை 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் ஆனது நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையின் போது அமலாக்கத்துறை தன்னை துன்பறுத்தவில்லை என நீதிபதியிடம் ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    • ராயன் திரைப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.

    இந்நிலையில் 'ராயன்' திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாவதை ஒட்டி, ஆண்டிப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் இன்று  சாமி தரிசனம் செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் ஒருசில அம்சங்கள் உள்ளன.
    • தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது.

    அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

    மத்திய நிதி அமைச்சர் அவர்கள் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்கள். அதன் முன்னெடுப்பாக நேற்று (22.7.2024), பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-2024ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில் 6.5 முதல் 7 சதவீதம் வரை நிலையான விலை விகிதப்படி (ஊடிளேவயவே யீசiஉநள) பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதத்தைவிட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி வேலை வாய்ப்பை உருவாக்குதல், திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தல், வேளாண்துறை மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு (ஹஐ) மூலம் தொய்வடைந்துள்ள தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் ஒருசில அம்சங்கள் உள்ளன.

    விவசாயத் துறை மேம்பாட்டுக்கு, பருவ நிலை மாற்றத்தை கருத்திற்கொண்டு உற்பத்தித் திறனை பெருக்கும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுய சார்பு நிலையை எட்டுதல், காய்கறி உற்பத்தியை நகர்ப்புற பகுதிக்கு அருகாமையில் பயிரிடுவதை ஊக்குவித்தல், விவசாய உற்பத்திக் குழுக்களை ஊக்குவித்தல் என்று ஒருசில அம்சங்கள் உள்ளன.

    எனினும், விவசாயிகள் இன்று உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசு கொள்முதல் உள்ளிட்ட சந்தை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் தொழில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் போன்றவற்றை பெருமளவில் ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    எனவே, தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது.

    அடுத்ததாக, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அவர்களை தொழில் துறையில் தேவைப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தயார்படுத்துதல் போன்றவற்றில் ஒருசில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

    உதாரணமாக, பணியாளர் வருங்கால வைப்புநிதி (நுஞகு) அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் (டீசபயnணைநன ளுநஉவடிசள) முதன் முதலில் வேலைவாய்ப்பை பெறுபவர்களுக்கு ஓராண்டுக்கு ஊக்கத் தொகையையும், அந்த வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் முனைவோருக்கு ஊக்கத் தொகையையும் வழங்குவது சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

    இதுதவிர, திறன் மேம்பாட்டிற்கான முயற்சிகள், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    ஆனால், கள அளவில் இந்த உதவிகளை கள அளவில் இந்த உதவிகளை கள அளவில் இந்த உதவிகளைப் பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன. பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன.

    எனவே, திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு, குறு தொழில்களுக்கு கடன் குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதிலும் உள்ள செயல்முறை ரீதியிலான பிரச்சனைகளை வழங்குவதிலும் உள்ள செயல்முறை ரீதியிலான பிரச்சனைகளைத்தீர்க்க வழிவகை தீர்க்க வழிவகை காண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

    பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியின் பெரும் பகுதி தற்போது ஆட்சியிலுள்ள அரசின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு தொழில் வழிப்பாதை, (ஐனேரளவசயைட ஊடிசசனைடிச) சாலை கட்டமைப்பு மேம்பாடு, புது விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், புதிய மின் திட்டங்கள், ஆந்திர பிரதேசத்திற்கு புதிய தலைநகருக்கான திட்டம், நீர் ஆதார திட்டங்கள் என பல திட்டங்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கியிருப்பது, மத்திய அரசின் பாரபட்சமான நிலையைக் காட்டுகிறது.

    கோதாவரி- கோதாவரி-காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழ காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழ காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழகத்தினால் முன்மொழிந்த கத்தினால் முன்மொழிந்த போதிலும், போதிலும், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது, தமிழக விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. 

    அதேபோல், அதேபோல், இதே மத்திய அரசு அறிவித்த இதே மத்திய அரசு அறிவித்த இதே மத்திய அரசு அறிவித்த ஓசூர், கோயம்புத்தூர் பாதுகாப்பு சூர், கோயம்புத்தூர் பாதுகாப்பு தளவாடங்கள் தொழில்வழி திட்டமும் அறிவிப்பு செய்ததோடு கிடப்பில் போடப்பட்டுள்ளதை நான் குறிப்பிட விரும்புகிறேன். 

    அதேபோல், அதேபோல்,நடந்தாய் வாழி காவிரி திட்டம் நடந்தாய் வாழி காவிரி திட்டம் நடந்தாய் வாழி காவிரி திட்டம்(காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்) பற்றி (காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்) பற்றி ஜனாதிபதி அறிவிப்பில் அறிவித்த ஜனாதிபதி அறிவிப்பில் அறிவித்ததோடு, இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்காமல் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. 

    வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் பீகார், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேஷ், உத்திரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கே பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படாதது ஒரு பெருத்த ஏமாற்றமாகும். 

    எப்போதும் செயல்படுத்துகிற ஊரக வளர்ச்சி திட்டங்கள், நகர்புற மேம்பாட்டு திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. பல அறிவிப்புகள் வரி சீர்திருத்தம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் செயல்படுத்தி எந்த அளவுக்கு வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்படும் என்பதையும், அதனால் வரி செலுத்துவோரின் சிரமங்கள் குறைகிறதா என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்த தருணத்தில் இந்த தருணத்தில் GST வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பின்பும், தொழில் வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பின்பும், தொழில் முனைவோர் பல்வேறு நடைமுறை சிரமங்களைத் முனைவோர் பல்வேறு நடைமுறை சிரமங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர் என்பதைக்குறிப்பிட விரும்புகிறேன்.

    வரி விதிப்பைப் பொறுத்தவரை, சுங்க வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் உள்நாட்டு உற்பத்தித் திறனும், போட்டியிடும் திறனும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

    எனினும் நேரடி வரி விதிப்பில், எனினும் நேரடி வரி விதிப்பில், புதிய வரி விதிப்பு முறையை புதிய வரி விதிப்பு முறையை புதிய வரி விதிப்பு முறையைப் பின்பற்றுவோருக்கு பின்பற்றுவோருக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. மட்டும் ஆண்டுக்கு ரூ. 17,500 சேமிக்கக்கூடிய அளவில் வரி விகிதத்தில் மாற்றம் 17,500 சேமிக்கக்கூடிய அளவில் வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செய்யப்பட்டுள்ளது. இது இன்றைய சூழ்நிலையில் போதுமானதாக இல்லை என்பது என்னுடைய கருத்து. இதனால் வரி விதிப்பில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் மத்தியில் இது ஒரு பெருத்த ஏமாற்றமே.

    இதுதவிர, பங்குச் சந்தை வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    பொதுவாக, கார்ப்பரேட்டுகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தும் அந்த அதிக லாபத்தை, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் அவர்கள் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஊக்குவிப்பதற்கான எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

    எனவே, தனியார் துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கு துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கு துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. 

    மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க- மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் நாடாளுமன்ற வின் நாடாளுமன்ற வின் நாடாளுமன்றத்தேர்தல் அறிக்கையில் அளித்த தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள் இந்த வரவு, பல வாக்குறுதிகள் இந்த வரவு,செலவுத்திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

    இந்த வரவு, செலவு அறிக்கையில் முதியவர்களுக்கான எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. முதியோர்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு முதியோர்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்த சலுகைகளையாவது திரும்ப அளித்திருக்கலாம். 

    எனவே, இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை.

    குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் 2019 முதல் 2024-ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் நன்மைக்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தது போல், அமைதியாக காலம் தள்ளுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • 10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர்.
    • அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே காந்திநகரில் உள்ள ஒரு ஏ. டி.எம். மையத்தில் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 28) என்பவர் பணம் எடுக்க சென்றிருந்தார். எதிர்பாராதமாக பணம் வராததால் ஏ.டி.எம். கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு பணத்தை எடுக்காமல் சென்று விட்டார். அதன் பின்னர் அங்கு பணம் எடுக்கச் சென்ற 12-ம் வகுப்பு மாணவர்களான முகிலன், கவுஷிக் இருவரும் பணம் எடுத்த போது கூடுதலாக ரூ.10 ஆயிரம் வந்திருந்தது. இதனால் அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தை வைத்துக்கொண்டு மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை அலங்கியம் போலீஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து ஹரிபிரசாரத்தை வரவழைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த 10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர். மேலும் கூடுதல் பணத்தை ஒப்படைத்த அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    • தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

    பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது. வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

    ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

    வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும். காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும். அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

    அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும். ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை.

    ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும். முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

    தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட. 15 விழுக்காட்டிலிருந்து 6% ஆக குறைகப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும். செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் குறையும்.

    நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத் தான். புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்பது வரவேற்கத்தக்கது.

    ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வருமானவரி முறை செலவுகளை ஊக்குவிக்கக்கூடியது. பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும். புதிய வருமானவரி முறையில் சலுகை வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமானவரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

    ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் & சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள். பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, யாரும் வராததால், விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் அதற்கான உபகரணங்கள் சர்வே உட்பிரிவு ஒன்றுக்கு ரூ.10 வழங்கும் பட்சத்தில் இப்பணியை செய்ய இயலும் என தீர்மானம் வழங்கிய நிலையில், இப்பணியை செய்யாத தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமமூர்த்தியை எந்த ஒரு விளக்கமும் இல்லாமல், பணியிடை நீக்கம் செய்த கடலூர் கோட்டாட்சியரை கண்டித்தும், அவரை உடனடியாக பணியில் சேர்க்க வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முதல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, யாரும் வராததால், விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட செயலாளர் ஜெயராமன் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம மூர்த்தி என்பவரை பணியிட நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவருக்கு உடனடியாக ஆணை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

    கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்வதால் வருவாய் துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பின்னணியில் இருந்து பலர் பண உதவிகளை செய்துள்ளனர்.
    • போலீஸ் காவலில் உள்ள 4 பேரிடமும் தீவிரமாக விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குபழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக அவரது தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேர் முதலில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள்.

    இதன் பின்னர் தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கி வருகிறார்கள். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திருவேங்கடம் மட்டும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேசின் படுகொலை மட்டுமே காரணம் இல்லை என்பதும், மேலும் 3 ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் விசாரணை வேகப்படுத்தப்பட்டு கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, வக்கீல் அருள், ராமு மற்றும் த.மா.கா.வைச் சேர்ந்த வக்கீல் ஹரிகரன் ஆகிய 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ஹரிகரனிடம் 5 நாள் போலீஸ் காவலிலும், மற்றவர்களிடம் 3 நாள் காவலிலும் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பின்னணியில் இருந்து பலர் பண உதவிகளை செய்துள்ளனர். தங்களால் நேரடியாக களம் இறங்க முடியாத நிலையில் பண உதவி, வாகன உதவி போன்றவற்றை செய்தவர்கள் யார்? யார்? என்பது பற்றிய விசாரணை போலீஸ் காவலில் உள்ள 4 பேரிடமும் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    வக்கீல் அருளின் வங்கி கணக்குக்கு ரூ.50 லட்சம் பணம் செலுத்தப்பட்டதாகவும், பாஜகவில் இருந்த பெண் தாதா அஞ்சலை ரூ.10 லட்சம் பணம் கொடுத்ததாகவும் ஏற்கனவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூ.1 கோடி வரை பணப்பட்டு வாடா நடைபெற்று இருப்பதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு வேலூர் சிறையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த ஆயுள் கைதியும் திட்டம் தீட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவரது வழியில் பணப்பட்டுவாடா ஏதும் செய்யப்பட்டதா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தாம்பரத்தை சேர்ந்த ரவுடி ஒருவரும் பழிக்குபழி வாங்குவதற்கு சபதம் எடுத்து திட்டம் போட்டுள்ளான். அவனது சார்பில் இருந்தும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான பட்டியல் தயாராகி வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு வழிகளில் நடைபெற்ற பணப்பட்டுவாடா? பற்றியும் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் குறித்தும் பொன்னையா பாலு உள்பட 4 பேரிடமும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே உள்ளது. மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளில் இருந்து வறண்ட காற்றின் வருகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெப்பநிலை ஒரு டிகிரி உயரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும் மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்து உள்ளதே இதற்கு காரணம். ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.

    சென்னை மண்டல வானிலையும் பெரும்பாலும் வறண்டதாகவே உள்ளது என்று இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

    ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் வானிலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமேற்கு பகுதிகள் கடல் காற்றுடன் ஒன்றிணைந்து வெப்ப சலனத்தை தூண்டும் என்பதால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    ×