என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது.
    • போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் வெளிநாட்டில் 17 நாட்கள் தங்கி 19 நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.7600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். 17 நாட்களில் வெறும் 7,600 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்பதை தோல்வியாக தான் நாங்கள் பார்க்கிறோம். இவ்வளவு நாட்கள் சென்று குறைந்த முதலீடு தான் பெற்றிருக்கிறார்.

    மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், மதுக்கடையை உடனடியாக மூடினால் தமிழ்நாட்டின் சூழல் மோசமாகிவிடும் என தமிழக மக்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். தமிழக இளைஞர்கள் கெடுத்ததே தி.மு.க.தான். தமிழகத்தில் மது இல்லாமல் இருக்கமுடியாத நிலையை உருவாக்கியதே திராடவிட மாடல் அரசுதான்.

    மதுவிலக்கு பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து பேசுகின்ற கனிமொழி மூன்று ஆண்டுகாலம் மவுனமாக இருக்கிறார். அனைத்து விதமான போதைப் பொருட்களும் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார். இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள், காவல்துறை எதற்கு இருக்கிறது?

    சென்னை கோவளத்தில் ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வரும் போது சென்னைக்கு தான் மூன்று மடங்கு அதிகமான பறவைகள் வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு நெருக்கடி ஏற்படும். இந்த திட்டத்தை தவிர்த்து மூட வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கட்சி. எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கும் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார்.

    திருமாவளவன் மது விலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு தொடர்பாக நாங்கள் பி.எச்.டி. படித்துள்ளோம், திருமாவளவன் எல்.கே.ஜி. தான் படித்திருக்கிறார். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற திருமாவளவன் பதிவு சரியானது. அதை ஏன் நீக்க வேண்டும்? தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என கட்சி தொடங்கவில்லை. அதை நீக்கியது தான் சரியில்லை.

    நாடு முழுவதும் மது விலக்கு கோரிக்கையை கண்டிப்பாக வைப்போம். மதுவிலக்கை எல்லா மாநிலங்களிலும் இதை செய்ய வேண்டும் படிப்படியாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசு மதுவை விற்கவில்லை, திணிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம்.
    • இப்போதைய நிலையில் நடிகர் விஜய் கூட தனித்து தேர்தலில் நிற்க முடியாது.

    மதுரை:

    முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத்தலைவரும், நடிகருமான கருணாஸ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு தேசத்திற்காக போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணம் செய்து சொற்பொழிவு நடத்த இருக்கிறேன். சமூக வலைத்தளங்களின் மூலம் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான தகவல்கள் சென்றடைந்து விடுகின்றன. இதனை மாற்றி உண்மையான வரலாற்றை மக்களை சந்தித்து பேச இருக்கிறேன். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையை பேசினார். அவரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்கவைத்துள்ளனர். இது சர்வாதிகாரபோக்கு. இதை ஒட்டு மொத்த தமிழக மக்கள் மற்றும் தமிழக வியாபாரிகளின் அவமானமாக கருதுகிறேன். பிரதமர் டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்து சொல்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாங்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் பதில் அளித்து வருகிறோம். அரசியலுக்கு வருவது எளிதல்ல. நடிகர் விஜய்யின் கொள்கை, சித்தாந்தம் குறித்து பேசினால், அதன்பின்னர் அவருடன் கூட்டணி வைப்பது பற்றி யோசிக்கலாம்.

    விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு இல்லை. சாதி, மத அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என்கிறார் திருமாவளவன். இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார்?. பா.ம.க. சாதிக்கட்சி என்றால், விடுதலை சிறுத்தைகள் என்ன கட்சி?. அர்ஜூன் ரெட்டி விடுதலை சிறுத்தைகளில் சேர்ந்ததால் அது தேசிய கட்சியாக மாறிவிட்டதா?.

    அக்கட்சி செய்வது பொது அரசியலா? சுய அரசியலா? என்பது தெரியவில்லை. சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம். மது ஒழிப்பு மாநாடு என்பது ஓர் அரசியல் நாடகமாக இருக்கிறது. இப்போதைய நிலையில் நடிகர் விஜய் கூட தனித்து தேர்தலில் நிற்க முடியாது. நான் தனித்து நின்றால், நானும் எனது மனைவியை தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். இது கள யதார்த்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது.
    • தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

    கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மெகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது.

    சென்னையில் நடைபெற்ற சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திமுகவின் பல அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது என்பார்.
    • வீட்டுக்கு வா, உனக்கு நான் பரிசு தருகிறேன் என்றார் வைரமுத்து.

    சென்னை:

    மலையாள சினிமாவில் பாலியல் ரீதியாக எழுந்த பிரச்சனைகளால் முன்னணி நடிகர்கள் பலரின் பெயர்கள் வெளிவந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இதற்கிடையே, தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வைரமுத்துவை பொறுத்த வரைக்கும் பாடகிகளை தான் முதலில் குறி வைப்பார். அதிலும் நான் மே மாதம் 98 பாடலை பாடியிருக்கிறேன். அந்தப் பாடலைக் கேட்ட பிறகு எனக்கு போன்செய்து 'உன் பாடலில் காமம் இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது. உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது.' இப்படித்தான் அவர் வலையில் விழ வைப்பாராம்.

    அந்தப் பாடலில் காதல் இருக்கிறது என்றால், அதில் ஆடிய ரீமாசென்னைப் பார்த்து காதல் வரலாம். அந்தப் பாட்டைப் பற்றி அவ்வளவு பெருமையாக கூறும்போதே நமக்கு தெரிந்துவிடும், ஏதோ ஒன்னுக்கு இவர் ஆசைப்படுகிறார் என.

    அதுமட்டுமின்றி, வீட்டுக்கு வா, உனக்கு நான் பரிசு தருகிறேன் என்றார். நான் என் பாட்டியுடன் போயிருந்தேன். நீ தனியா வருவேனு பார்த்தேன் என வைரமுத்து கூறினார். இல்லை, நான் எங்கு போனாலும் பாட்டியுடன்தான் வருவேன் என்றேன்.

    அவருடைய நோக்கம் நான் வந்ததும் என்னை தொடவேண்டும். தொட்டுப் பார்த்து ஆசைப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அது நடக்கவில்லை.

    அதன்பின், என் பாட்டி வைரமுத்துவிடம், உங்களைப் போன்றவர்களால்தான் இந்த மாதிரி பிள்ளைகள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். நீங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு தந்தை போல என சொன்னதும் வைரமுத்துவுக்கு வியர்த்து விட்டது.

    உடனே என்னுடைய பாட்டி, பரிசு தருகிறேன் என்று சொன்னீர்களே பரிசு எங்கே என கேட்டார். வீட்டுக்கு பின்னாடி சென்று அங்கிருந்த இரு ஷாம்பு பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்.

    அதன்பிறகு அங்கிருந்து வந்துவிட்டோம். இருந்தாலும் தொடர்ந்து அவர் தரப்பிலிருந்து எனக்கு போன் வந்து கொண்டே இருந்தது. நான் கட் பண்ணி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

    • தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மொட்டை.
    • தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

    5 மீனவர்கள் மொட்டை அடித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

    • "சீட் ஷேர் அல்ல, பவர் ஷேர் தான் முக்கியம்" என திருமாவளவன் பேசிய வீடியோ விவாதப் பொருளானது.
    • மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் பேசிய உரையின் சுருக்கம்.

    ஆட்சி, அதிகாரம், அமைச்சரவையில் பங்கு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    " சீட் ஷேர் அல்ல, பவர் ஷேர் தான் முக்கியம்" என திருமாவளவன் பேசிய வீடியோ விவாதப் பொருளானது.

    1999ம் ஆண்டு தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்தபோதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    மேலும், செப்டம்பர் 12ம் தேதி அன்று மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் பேசிய உரையின் சுருக்கம் என குறிப்பிட்டு திருமாவளவன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    திருமாவளவனின் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோவின் முழு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

    • சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் நிதியமைச்சரை சந்தித்தார்.
    • அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உணவக நிர்வாகம் விளக்கம் அளித்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், "செப்டம்பர் 11ல் நிதி அமைச்சர் உடனான உரையாடல் வைரல் ஆனதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் அவரை சந்தித்தார்

    இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு நன்றி

    தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். எங்களு ஆதரவு அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.
    • கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

    மதுரையில் காவல்துறையினர் எடுத்துச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் மீண்டும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கொடிகம்பத்தை மீண்டும் வழங்கியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    புதூர் பகுதியில் அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.

    இதனால், கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், விசிக கொடுக்கம்பம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரேன் மூலம் எடுத்து வரப்பட்ட 62 அடி உயர கொடிக்கம்பத்தை நடுவதற்கான பணியில் விசிக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

    விசிக கொடி ஏற்றுவதில் பல்வேறு காரணங்களை கூறி மதுரை ஆட்சியர் தடை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மூத்த அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என திருமாவளவன் கூறி இருந்த நிலையில் கொடிக்கம்பம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • கோட் படம் ஒரு பேண்டஸி படம். அந்த அளவில் அதை ரசிக்கலாம்.
    • எனது கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்

    தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு அவர் நிதானமாக பதில் அளித்தார்.

    கேள்வி: ஹேமா கமிட்டி குறித்து உங்கள் கருத்து

    லெஜெண்ட் சரவணன்: கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று நம்புகிறேன்

    கேள்வி: நீங்கள் படங்களில் நடிப்பது அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?

    லெஜெண்ட் சரவணன்: மக்கள் நலன்களில் எப்போதும் எனக்கு அக்கறை உண்டு. காலம் நேரம் அமைந்தால் அரசியலுக்கு வருவேன். எனது கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்.

    கேள்வி: விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் போவீர்களா

    லெஜெண்ட் சரவணன்: இன்னும் அதைப்பற்றி யோசிக்கவில்லை

    கேள்வி: விஜய் கட்சிக்கு நீங்கள் ஆதர்வு தெரிவிப்பீர்களா?

    லெஜெண்ட் சரவணன்: இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. 2026 தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும். வலுவான கூட்டணி ஆமைக்கு கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    கேள்வி: விஜயின் கோட் படம் பார்த்தீர்களா? அந்த படம் குறித்து உங்களது கருத்து

    லெஜெண்ட் சரவணன்: கோட் படம் ஒரு பேண்டஸி படம். அந்த அளவில் அதை ரசிக்கலாம்.

    கேள்வி: சினிமாவில் அடுத்த தளபதி யார்?

    லெஜெண்ட் சரவணன்: நீங்கள் தான் அடுத்த தளபதி யார் என்று சொல்ல வேண்டும்

    என்று தெரிவித்தார்.

    • சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டார்.

    அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார்.

    சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டார்.

    திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    தஞ்சையில் இருந்து சுப நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் கார் மீது சுற்றுலா வேன் மோதியது.

    காரில் வந்தவர்கள் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    வேனில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலமைச்சர் அமெரிக்கா சென்று 17 நாட்கள் தங்கி 7500 கோடி முதலீடு திரட்டியதாக சொல்கின்றனர்.
    • சந்திரபாபு நாயுடு ஏழு நாட்கள் மட்டும் அமெரிக்கா சென்று 33,000 கோடி தொழில் முதலீட்டை திரட்டினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார். முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை அவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

    தே.மு.தி.க. 20-வது ஆண்டு எட்டிபுள்ளதை முன்னிட்டு கட்சியில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தேமுதிக கட்சி 20வது ஆண்டு விழா மற்றும் கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் வழங்கியதற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. தேமுதிக நான்கு சட்டமன்றத் தேர்தல், நான்கு பாராளுமன்றத் தேர்தல், மூன்று உள்ளாட்சித் தேர்தல் சந்தித்து வலுவான கட்சியாக உள்ளது. 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்.

    தொல். திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் அது குறித்து ஆலோசனை செய்யப்படும். சிறுவர்களுக்கான வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அனைத்து சிறு கிராமங்களில் கூட கஞ்சா விற்பனை உள்ளது. இதை போல் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மேற்கு வங்காளத்தில் இயற்றியது போல் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். முதலமைச்சர் அமெரிக்கா சென்று 17 நாட்கள் தங்கி 7500 கோடி முதலீடு திரட்டியதாக சொல்கின்றனர். ஆனால் சந்திரபாபு நாயுடு ஏழு நாட்கள் மட்டும் அமெரிக்கா சென்று 33,000 கோடி தொழில் முதலீட்டை திரட்டினார். ஏற்கனவே போர்டு நிறுவனம் தமிழகத்தில் இருந்தது தான். அதை மீண்டும் கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் பரமஜோதி உட்பட பலர் இருந்தனர்.

    ×