என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
- தமிழகத்தில் 18-ந்தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி 48 மணி நேரத்தில தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 16, 17 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 18-ந்தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
லட்சத்தீவு, மாலத்தீவுகள் பகுதியில் மற்றொரு தாழ்வுப்பகுதி நிலவுவதாக தெரிவித்துள்ளது.
- நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வந்த நிலையிலும் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மண்டபம்:
தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதனால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தடை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்து சென்றதால் 7 நாட்களுக்கு பின் கடல் காற்று குறைந்து இயல்பு நிலைக்கு மாறியது. நேற்று சூறாவளி காற்றின் வேகம் தணிந்ததால் இன்று பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க மீன்துறை அனுமதி அளித்தது.
அதன்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் இன்று அதிகாலை காலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். 7 நாட்களுக்கு பின்பு இன்று (14-ந் தேதி) கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து கடந்த 11-ந்தேதி சவரன் 58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. 12-ந்தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால் ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையானது.
திடீரென நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,230-க்கும், ஒரு சவரன் ரூ.57,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,840
12-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
11-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
10-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,640
09-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-12-2024- ஒரு கிராம் ரூ. 101
12-12-2024- ஒரு கிராம் ரூ. 104
11-12-2024- ஒரு கிராம் ரூ. 103
10-12-2024- ஒரு கிராம் ரூ. 104
09-12-2024- ஒரு கிராம் ரூ. 100
- தாமிரபரணி ஆற்றிலும், குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது.
- தண்ணீர் தேங்கி இருக்கின்ற அனைத்து இடங்களும் ராட்சத குழாய் வைத்து தண்ணீரை அகற்ற வேண்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை நேற்றிலிருந்து பெய்து கொண்டிருக்கிறது.
கனமழையின் காரணமாக அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் தாமிரபரணி ஆற்றிலும், குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு உடனடியாக மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்குமிடம், உணவு, மருந்து மாத்திரை பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர், உடுத்த உடை ஆகியவற்றை வழங்கி உரிய பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
தண்ணீர் தேங்கி இருக்கின்ற அனைத்து இடங்களும் ராட்சத குழாய் வைத்து தண்ணீரை அகற்ற வேண்டும். எவ்வளவு பெரிய மழை வந்தாலும் நாங்கள் சமாளிப்போம் என்று வெறுமன பேச்சில் இல்லாமல் செயலில் ஈடுபட்டு தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசினுடைய கடமையாகும்.
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளையும், பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இந்த அரசு நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 23 அடியை தாண்டி இருந்தது.
- பூண்டி ஏரி நீர்வரத்து குறைந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்து இன்று குறைந்ததால் ஏரியின் நீர்மட்டமும் சரிந்தது. மொத்த நீர்மட்டம் 24 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 22.90 அடியாக உள்ளது.
நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 23 அடியை தாண்டி இருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து இன்று விநாடிக்கு 3250 கனஅடியாக சரிந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 4500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதேபோல் பூண்டி ஏரி நீர்வரத்தும் குறைந்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 10,300 கனஅடியாக உள்ளது. நீர் திறப்பு விநாடிக்கு 16,500 கனஅடி அடியாக உள்ளது.

நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் கனமழையினால் நீர் நிரம்பியுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பியுள்ளதையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் வெளியேற்றப்படுவதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீர் வெளியேற்றப்பட்டு வருவது தொடர்பான எச்சரிக்கை, நீர் வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தான். இதனை அரசு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் எந்தவிதமான அச்சமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை. கனமழை நேரத்தில், அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
- அணையின் நீர்மட்டம் 126.65 அடியாக உயர்ந்துள்ளது.
- அணையின் மொத்த நீர் இருப்பு 4,190 மில்லியன் கனஅடியாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
வெள்ளப்பெருக்கு தொடர் மழை காரணமாக இன்றும் தேனி மாவட்டத்தில் 2-ம் நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுருளி அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதுடன் மக்கள் நடந்து செல்லும் பாதையிலும் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேகமலை, சின்னசுருளி அருவியிலும், கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடைவிதித்துள்ளது.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சென்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 127.65 அடியாக உள்ளது. 2 நாட்களில் சுமார் 8 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு 17652 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4190 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 50 அடிக்கும் கீழ் இருந்த நிலையில் இன்று காலை 5 அடிக்கு மேல் உயர்ந்து 55.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10347 கன அடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2759 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 672 கன அடி. திறப்பு 566 கன அடி. இருப்பு 435.32 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.11 அடியாக உள்ளது. ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 666 கன அடியாகவும், திறப்பு 30 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 96.55 மி.கன அடியாக உள்ளது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 122.57 கன அடி. இருப்பு 79.57 மி.கன அடி.
பெரியாறு 54, தேக்கடி 100, சண்முகாநதி அணை 84, ஆண்டிபட்டி 35, அரண்மனைபுதூர் 28.2, வீரபாண்டி 12.4, பெரிய குளம் 55.2, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 33, வைகை அைண 34, போடி 18.8, உத்தமபாளையம் 47.8, கூடலூர் 37.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்.
- இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
வங்கக்கடலில் உருவாகி தமிழக பகுதிகளை கடந்து சென்ற தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது. தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுப்பகுதியாக வலு இழந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவி வந்தது.
நேற்று லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவி வந்த நிலையில், இது இன்று மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலு குறைந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிடும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகும் என்றும், அதன் காரணமாக தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் நேற்று தெரிவித்தது.
அதன்படி இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனைத் தொடர்ந்து வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
- திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.
சென்னை முதல் நெல்லை வரை அனேக மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல் திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது.
திருச்சியில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக் கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
இதற்கிடையே திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர், Jakson Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் அங்கூர் கோயல் ஆகியோர் கையெழுத்து.
- மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வழித்தடம் 5-ல் மின், இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மாதவரம் பால் பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை நிலையம் வரை 10 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் M/s Jakson Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம் ராஜேஷ் சதுர்வேதி), M/s Jakson Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் (EPC business) அங்கூர் கோயல் ஆகியோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
- திருமாவளவன் இந்த தகவலை தொடர்ந்து மறுத்து வந்தார். இறுதியில் விழாவில் பங்கேற்காததற்கு விளக்கம் அளித்தார்.
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொள்வது உறுதியானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை. முதலில் தொல். திருமாவளவன் பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் என திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தை திருமாவளவன் நீண்ட அறிக்கையில் மூலம் விளக்கியிருந்தார்.
இருந்தபோதிலும் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது கூட்டணி கட்சி நெருக்கடியால் அவர் பங்கேற்வில்லை எனக் கூறினார்.
விஜயின் இந்த பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திருமாவளவன் கூட அழுத்தம் கொடுத்தால் இணங்கும் அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை எனக் கூறியிருந்தார்.
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற புத்த வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் நேரடியாக தி.மு.க. அரசை தாக்கி பேசினார். விழாவில் அரசியல் பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஆதவ் அர்ஜூனா அதையும் மீறி பேசியுள்ளார். இதனால் கட்சியில் இருந்து ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்வதாக திருமாவளவன் அறிவித்தார். இருந்தபோதிலும் ஆதவ் அர்ஜூனா தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆதவ் அர்ஜூனா பேட்டியளித்தார். அப்போது "விஜய் பங்கேற்ற புத்தக விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூட்டணி உருவாகும் என்பதை புதிதாக வந்தவர்கள் கூட முதிர்ச்சியற்ற தன்மை என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவை சந்திக்கும்போது விழாவிற்கு செல்ல வேண்டாம் எனக் கூறினார். நீங்கள் சென்றால் கூட்டணியில் பிரச்சனையாகிவிடும் என அவரது கருத்தை கூறினார். விழாவில் பங்கேற்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை என அமைச்சர் எ.வ. வேலு திருமாவளவனிடம் பேசினார். திமுக-வின் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது. முதிர்ச்சியற்றது" ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.






