என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டை காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
    • வீடியோ வைரலாகி பயனர்களை கவர்ந்துள்ளது.

    சமூக வலைதளங்களில் வன விலங்குகள் பற்றிய வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். இவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் ரசிக்க செய்யும். குறிப்பாக சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டை காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் கன்ஹா புலிகள் காப்பகத்தில் 2 ஆண் புலிகள் கர்ஜனையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. 26 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 2 ஆண் புலிகளும் சண்டையிடும் போது கடும் உக்கிரத்தை காட்டின.

    புலிகள் காப்பகத்துக்குள் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை காப்பகத்தின் கலை இயக்குனர் ரவீந்திர மணி திரிபாதி சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாகி பயனர்களை கவர்ந்துள்ளது.



    • சுதந்திரத்துக்கு முன் ராஜாக்களுக்கும், மகாராஜாக்களுக்கும் மட்டுமே உரிமைகள் இருந்தன.
    • சுதந்திரத்துக்கு பின்னரே உங்களுக்கு நிலம் மற்றும் நில உரிமைகள் கிடைத்துள்ளன என்றார் ராகுல் காந்தி.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் நேற்று நடந்த பேரணியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், சுதந்திரத்திற்கு முன்பும், அரசியல் சாசனத்திற்கு முன்பும் இந்த நாட்டில் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு உரிமை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ராஜாக்களுக்கும், மகாராஜாக்களுக்கும் மட்டுமே உரிமைகள் இருந்தன. சுதந்திரம் உரிமைகளை கொண்டு வந்தது. உங்களுக்கு நிலம் மற்றும் நில உரிமைகள் கிடைத்துள்ளன என தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்து கூறியதாவது:

    அரசியல் சட்டத்தை தனது பாக்கெட் நாட்குறிப்பாகக் கருதும் ராகுல் காந்தி, சுதந்திரத்திற்கு முன் இந்தியாவின் அரச குடும்பங்களின் பங்கு குறித்து கூறியது அவரது குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.

    அதிகாரப் பசியில், நாட்டில் சமத்துவத்திற்கு அடித்தளமிட்டது இந்த அரச குடும்பங்கள் என்பதை அவர் மறந்துவிட்டார். முதலில் வரலாற்றைப் படியுங்கள், பிறகு அறிக்கை செய்யுங்கள்.

    காந்தி அதிகாரத்தால் இயக்கப்பட்டார். இந்தியாவில் சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடித்தளத்தை அரச குடும்பங்கள் தான் கட்டியெழுப்பின.

    பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் நமது அரசியலமைப்பை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கருக்கு கல்வி கற்பதற்கு நிதி உதவி அளித்தார்.

    சத்ரபதி ஷாஹுஜி மகராஜ் 1902-ம் ஆண்டு தனது ஆட்சியில் நாட்டின் பகுஜன்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்ததன் மூலம் சமூக நீதிக்கு அடித்தளமிட்டார்.

    காங்கிரஸ் கட்சியினர் ஒரு சர்வாதிகார சித்தாந்தத்திற்கு பொறுப்பானவர்கள். தலித், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை மறுத்துள்ளனர் என தெரிவித்தார்.

    • கங்கையில் நீராடுவதால் வறுமை ஒழிந்து விடுமா?. உங்களுடைய வயிறு நிறையுமா?
    • நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி எழுப்ப விரும்பவில்லை.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மாவ் நகரில் ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார்.

    பேரணியில் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது கூறியதாவது:-

    நரேந்திர மோடியின் பொய் வாக்குறுதியில் சிக்காதீர்கள். கங்கையில் நீராடுவதால் வறுமை ஒழிந்து விடுமா?. உங்களுடைய வயிறு நிறையுமா? நான் யாருடைய நம்பிக்கையையும் (aastha) கேள்வி எழுப்ப விரும்பவில்லை. யாராவது தவறாக உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    ஒரு குழந்தை பசியால் இறந்து கொண்டிருக்கும்போது, பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும்போது, தொழிலாளர்களுக்கு கடன் கிடைக்காதபோது நிலைியில் மக்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து (கங்கை) நீராட போட்டி போடுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு சொல்லவும்.

    இப்படிப்பட்டவர்களால் நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. எங்கள் நம்பிக்கை கடவுள் மீதுதான். மக்கள் தினமும் வீட்டில் 'பூஜை' செய்கிறார்கள், பூஜை செய்த பிறகுதான் பெண்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்கிறார்கள். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுவதுதான் எங்களுக்கு பிரச்சினை.

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    கும்ப மேளா விழாவையொட்டி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இன்று மதியம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா புனித நீராடினார். ஏற்கனவே ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 50 சதவீத இடஒதுக்கீடு என்ற தடுப்புச்சுவரை காங்கிரஸ் உடைக்கும். அதற்கான சட்டத்தை பாராளுமன்ற இரு அவைகளிலும் கொண்டு வருவோம்.
    • அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்றுவதற்கு பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். முயற்சி.

    காங்கிரஸ் கட்சியின் "ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) பேரணி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மாவ் நகரில நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

    அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கர் மற்றும் அவர் உருவாக்கிய அரசியலமைப்பை அவமதிக்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து அதை பாதுகாக்க வேண்டும்.

    மத்தியில் அதிகாரத்தை உறுதி செய்தபின், நாடு தழுவிய சாதிவாரி வாக்கெடுப்பை காங்கிரஸ் செயல்படுத்தும். பிரதமர் மோடி இதை ஒருபோதும் செய்யமாட்டார்.

    50 சதவீத இடஒதுக்கீடு என்ற தடுப்புச்சுவரை காங்கிரஸ் உடைக்கும். அதற்கான சட்டத்தை பாராளுமன்ற இரு அவைகளிலும் கொண்டு வருவோம்.

    பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சுதந்திரத்திற்கு முந்தைய சூழ்நிலையை விரும்புகிறார்கள். அங்கே ஏழைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. பணக்காரர்களுக்கு மட்டுமே உண்டு.

    அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்றுவதற்கு பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்தன. இதனால்தான் 400 இலக்கு முழக்கத்தை பாராளுமன்ற தேர்தலின்போது முன் வைத்தனர்.

    அரசியலமைப்பு மாற்றப்படும் நாள் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், பழங்குடியினருக்கென ஏதும் இருக்காது.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
    • அரசின் உத்தரவை மீறி பிச்சை எடுத்தால் 1 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    மத்திய பிரதேச மாநிலத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் சாலை சிக்னலில் பிச்சை எடுத்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    பிச்சை எடுத்தவரிடம் மாற்று வேலை தருவதாகவும் பிச்சை எடுப்பதை கைவிடுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை அவர் ஏற்காததால் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • மறுநாள் காரை பார்த்த போது, அதன் பானட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சேதம் அடைந்த காரை சரி செய்ய ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் ஆனதாக கோஷி குறிப்பிட்டிருந்தார்.

    மத்திய பிரதேச மாநிலம் திருப்பதிபுரம் காலனியை சேர்ந்தவர் பிரஹ்லாத் சிங் கோஷி. இவர் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு நாய் மீது கார் மோதியது. இதில் நாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தன் மீது மோதிய காரை பார்த்தும், காரை ஓட்டி சென்ற பிரஹ்லாத்தை பார்த்தும் நாய் குரைத்தது. பின்னர் சிறிது தூரம் காரை துரத்தியது.

    இந்நிலையில் பிரஹ்லாத் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினார். மறுநாள் காரை பார்த்த போது, அதன் பானட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது முதல் நாள் கார் மோதியதில் காயமடைந்த நாய் மேலும் ஒரு நாயுடன் அவரது வீட்டிற்கு வந்து கார் பானட்டை தனது நகங்களால் கீறும் காட்சிகள் இருந்தது.

    சேதம் அடைந்த காரை சரி செய்ய ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் ஆனதாக கோஷி குறிப்பிட்டிருந்தார்.



    • வலப்புறமாக திரும்பிய போது கார் மீது அமர்ந்திருந்த 3 மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது போன்று காட்சிகள் உள்ளது.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகி விடுகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மாணவர்கள் சிலர் குழுவாக சேர்ந்து விருந்து கொண்டாடும் காட்சிகள் உள்ளது.

    அப்போது பரபரப்பான சாலையில் அந்த மாணவர்கள் காரில் செல்கின்றனர். கருப்பு நிற உடையணிந்து ஸ்டைலாக காட்சி அளிக்கும் அந்த மாணவர்கள் கார் மீது அமர்ந்து பயணித்தனர். கார் வேகமாக சென்று வலப்புறமாக திரும்பிய போது கார் மீது அமர்ந்திருந்த 3 மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது போன்று காட்சிகள் உள்ளது.

    பின்னணியில் சிலர் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. ரீல்ஸ் வீடியோவுக்கு ஆசைப்பட்டு மாணவர்கள் விபத்தில் சிக்கியது போன்று தெரிகிறது. ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • காதலனை திருமணம் செய்ய முதலில் பெற்றோர் சம்மதம் தெரிவித்து பின்னர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பெற்றோர்கள் தன்னை கொலை செய்து விடுவார்கள் என வீடியோ வெளியிட்டதால் தந்தை ஆத்திரம்.

    மத்திய பிரதேசத்தில் பெற்றோர் பார்த்த பையனுடன் 18-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணம் வேண்டாம், மற்றொருவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என வீடியோ வெளியிட்ட மகளை, துப்பாக்கியால் தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கோலா கா மந்தீர் என்ற பகுதியில் தானு குர்ஜார் என்ற 20 வயது இளம் பெண் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

    இவருக்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விக்கி என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கத்தை தொடர்ந்து விக்கியை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இது தொடர்பாக தனது பெற்றோரிடம் பேசியபோது முதலில் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே தானுக்கு அவரது தந்தை மகேஷ் குர்ஜார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண அழைப்பிதழ்கள் அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று தானு குர்ஜார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நான் விக்கியை திருமணம் செய்ய விரும்புகிறேன். எனது குடும்பத்தினர் முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் மறுப்பு தெரிவித்தனர். பெற்றோர் தினமும் என்னை அடிக்கிறார்கள். என்னை கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள். எனக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு என்னுடைய குடும்பம்தான் காரணம்" என கட்டாய திருமணம், காதலுக்கு எதிர்ப்பு, கொடுமை குறித்து 52 வினாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோ போலீசார் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து நபர்கள் பார்த்து, தானு வீட்டிற்கு விரைந்துள்ளனர். போலீசார் வீடியோ குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தானு பெற்றோருடன் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    அப்போது போலீசாரிடம் தனது மகளை சமாதானப்படுத்த சற்று நேரம் கொடுங்கள் என மகேஷ் கேட்டு, போலீசார் இருக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மகேஷ் அருகே அவரது உறவினர் ராகுல் என்பவரும் உடன் இருந்துள்ளார்.

    தானுவுடன் மகேஷ் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென துப்பாக்கியை எடுத்து மகள் என்று கூட பார்க்காமல் மார்பில் சுட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மகேஷ் உறவினர் ராகுல் தானுவின் உடலின் பல்வேறு இடங்களில் சுட தானு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    போலீசார் மகேஷ் மற்றும் ராகுலை கைது செய்ய முயன்றனர். ராகுல் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். மகேஷை கைது செய்த நிலையில், தானுவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அருகில் சென்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

    தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறத்ததால் பெற்ற மகளையே போலீசார், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தந்தை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சனாதன தர்மத்தைப் பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெறுவது முக்கியம்.
    • நமது வருங்கால தலைமுறையை காக்க வேண்டியது உங்கள் கடமை

    மத்தியப் பிரதேசத்தில் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசின் பிராமண நலவாரியத் தலைவர் விஷ்ணு ரஜவுரியா அறிவித்துள்ளார்.

    இந்தூரில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா, "சனாதன தர்மத்தைப் பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெறுவது முக்கியம். அதனால் அவர்களில் ஒருவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், குடும்பத்திற்காக சம்பாதிக்க முடியும் மற்றும் 'மோட்ச தர்மத்தை' அடைய முடியும்.

    நாடு நாளுக்கு நாள் முன்னேறி வருவதால், இந்தியாவில் வளங்களுக்குப் பஞ்சமில்லை. நம்மிடம் வலுவான மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசாங்கம் உள்ளது.

    வறுமை மற்றும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளை நாம் பேசக்கூடாது. சமீபகாலமாக 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வலிமையான தேசத்தை உருவாக்கி வருகிறோம். எனவே சனாதன தர்மத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். .

    கல்விதான் முக்கியம் என கற்பிக்கப்படுவதால் இளம் தலைமுறையினர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கின்றனர். நமது வருங்கால தலைமுறையை காக்க வேண்டியது உங்கள் கடமை" என்று தெரிவித்துள்ளார்.

    • நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன்.
    • இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.

    அறிவான குழந்தைகளை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பள்ளி மாணவிகளிடம் பெண் டிஜிபி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மாநில அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு தனியார் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிஐஜி சவிதா சோஹானே உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டுவரப் போகிறீர்கள். அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். நான் சொல்வதை நீங்கள் குறித்துவைத்து கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரிக்க கூடாது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, தண்ணீரை அருந்தி நமஸ்காரம் செய்தால் அறிவான குழந்தைகள் பிறக்கும்" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பள்ளி மாணவிகளிடம் பேச வேண்டிய பேச்சா இது என்று நெட்டிசன்கள் பெண் டிஜிபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த டிஐஜி சவிதா சோஹானே, "நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன். இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அந்த நாளை குறிப்பிட்டு பேசினேன்" என்று விளக்கம் அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு விருந்தினர்களை அழைக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு போலீஸ் வாகனம் அவரை நிறுத்தியது.
    • மன உளைச்சலுக்கு ஆளான சுக்லா, பன்னாவுக்குச் சென்று எச்பியிடம் புகார் அளித்தார்.

    மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் நடந்த வினோத சம்பவம் இது. நடந்து சென்றபோது ஹெல்மெட் அணியாததற்காக ஒருவருக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பன்னாவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஜய்கர் காவல் நிலையப் பகுதியில் இந்த அசாதாரண சம்பவம் அரங்கேறியுள்ளது. சுஷில் குமார் சுக்லா, தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு விருந்தினர்களை அழைக்க ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு போலீஸ் வாகனம் அவரை நிறுத்தியது.

    சுக்லா, தான் வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி அஜய்கர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

    தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீடு திரும்ப வேண்டும் என்று அவர் விளக்கியபோது, அதிகாரிகள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை எழுதி ஹெல்மெட் அணியவில்லை என அவருக்கு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சுக்லா, பன்னாவுக்குச் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பியிடம் புகார் அளித்தார்.

    புகாருக்கு பதிலளித்த எஸ்பி விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
    • வீட்டின் ஒரு அறையில் குளிர்சாதன பெட்டி மற்றும் இன்னும் சில பொருட்களை வைத்துள்ளார்.

    லிவிங் டுகெதரில் இருந்த பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நேற்று ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது சேலை அணிந்திருந்த பெண்ணின் அழுகிய உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பெண் நகைகள் அணிந்தும், கைகள், கழுத்து கயிற்றால் கட்டப்பட்டும், நெரிக்கப்பட்டும் காணப்பட்டது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அப்போது, தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவருக்கு சொந்தமான வீட்டில் உஜ்ஜைனியைச் சேர்ந்த படிதார் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் வாடகைக்கு உள்ளார். அப்போது அவருக்கு பிங்கி பிரஜாபதி என்ற 30 வயதுடைய பெண்ணுடன் திருமணத்திற்கு முந்தைய உறவில் இருந்துள்ளார். இவர்களின் இந்த உறவானது 5 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது.

    இதனிடையே, பிங்கி பிரஜாபதி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த படிதார் அவரை கொன்றுள்ளர். இதனால் செய்வதறியாது தவித்த படிதார், அப்பெண்ணின் உடலை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்துள்ளார். இந்த கொலையானது கடந்த ஜூன் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

    குடியிருந்த வீட்டை காலி செய்த படிதார், அதே வீட்டின் ஒரு அறையில் குளிர்சாதன பெட்டி மற்றும் இன்னும் சில பொருட்களை வைத்துள்ளார். அடிக்கடி வந்து வீட்டின் அறைக்கு வந்து சென்றுள்ளார். இதையடுத்து கடந்த புதன்கிழமை அன்று அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்தே, குளிர்சாதன பெட்டியில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

    ×