கர்ஜனையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட 2 புலிகள்- வீடியோ

சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டை காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கும். வீடியோ வைரலாகி பயனர்களை கவர்ந்துள்ளது.
கர்ஜனையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட 2 புலிகள்- வீடியோ
Published on

சமூக வலைதளங்களில் வன விலங்குகள் பற்றிய வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். இவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் ரசிக்க செய்யும். குறிப்பாக சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டை காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் கன்ஹா புலிகள் காப்பகத்தில் 2 ஆண் புலிகள் கர்ஜனையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. 26 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 2 ஆண் புலிகளும் சண்டையிடும் போது கடும் உக்கிரத்தை காட்டின.

புலிகள் காப்பகத்துக்குள் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை காப்பகத்தின் கலை இயக்குனர் ரவீந்திர மணி திரிபாதி சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாகி பயனர்களை கவர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com