என் மலர்
கேரளா
- அனுமதி வழங்கப்பட்ட ஒயாசிஸ் நிறுவனம் மீது டெல்லியில் மதுபான மோசடி வழக்கு உள்ளது.
- பஞ்பாப் மாநிலத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் மதுபான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை கடந்த 25 வருடமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மதுபான தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் வி.டி. சதீஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், கொள்கையை மீறியதாக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான வி.டி. சதீஷன் கூறியதாவது:-
கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கொள்கையை அரசு மீறியுள்ளதாக நாங்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளோம். மதுபான தொழிற்சாலை தொடங்க ஒயாசிஸ் (Oasis) நிறுவத்தினத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் இந்த நிறுவனம் மதுபான முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. பஞ்சாபில் ஒயாசிஸ் நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ள இடத்தில் நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீரை மாசுபடுத்தியதாக பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு அரசு உரிமம் வழங்கியுள்ளதில் ஊழல் நடைபெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. கலால் துறை அமைச்சரிடமிருந்து ஒரு தகுந்த பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு சதீஷன் தெரிவித்தார்.
- மகர விளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது.
- பக்தர்கள் இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை சீசன் கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி முடிவடைந்தது. மகரவிளக்கு பூஜை டிசம்பர் 31-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்தே தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் மகர விளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது. அன்று காலை பந்தளம் அரண்மனை பிரதிநிதி சாமி தரிசனம் செய்வார். அதன் பிறகு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படும்.
மகரவிளக்கு பூஜை முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. ஆன்லைன் முன்பதிவு மட்டுமின்றி உடனடி முன்பதிவு செய்தும் கோவிலுக்கு செல்லலாம் என்பதால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.
பக்தர்கள் இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நாளை இரவு வழக்கமான பூஜைகள் முடிந்து அரிவராசனம் பாடப்பட்டு இரவு கோவில் நடை சாத்தப்படும். அதே நேரத்தில் மகர விளக்கு காலத்தில் ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய் அபிஷேகம் இன்று காலையுடன் முடிவடைந்தது. பக்தர்கள் தரிசனம் செய்யக்ககூடிய இறுதி நாளான நாளை(19-ந்தேதி) நெய் அபிஷேகம் நடைபெறாது.
மண்டல பூஜை காலத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். அதேபோல் மகர விளக்கு பூஜை காலத்திலும் கடந்த ஆண்டை விட அதிக அளவிலான பக்தர்கள் வந்திருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சபரிமலை வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நிர்வாணமாக்கி வலுக்கட்டாயமாக வீடியோ எடுக்க முயற்சி
- அதிர்ந்து போன மாணவியின் தந்தை போலீசில் புகார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்கள்-மாணவிகள் இணைந்து படிக்கும் இந்த பள்ளியில் பாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பயின்று வருகின்றனர்.
அந்த பள்ளியில் பாலா பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி கடந்த 10-ந்தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்தார். பள்ளியின் ஓய்வு நேரத்தில் அந்த மாணவி வகுப்பறையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரது வகுப்பில் படித்து வரும் 7 மாணவர்கள், மாணவியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி உள்ளனர். அது மட்டுமின்றி மாணவியை தங்களது செல்போன்களில் நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.
மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்து அந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனது பெற்றோர் என யாரிடமும் அந்த மாணவி கூறவில்லை. இந்தநிலையில் வகுப்பறையில் வைத்து எடுத்த மாணவியின் நிர்வாண வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.
இதையறிந்த அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார். இதனால் அவர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த படி நேற்று முன்தினம் (16-ந்தேதி) பள்ளிக்கு மீண்டும் சென்றார்.
அப்போது அவரை ஏற்கனவே நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மாணவர்கள், மதிய இடைவேளை நேரத்தில் மாணவியை மீண்டும் நிர்வாணமாக்கி வலுக்கட்டாயமாக வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவி அந்த மாணவர்களின் பிடியில் இருந்து தப்பி வகுப்பறையில் இருந்து வெளியே ஓடினார். பின்பு அவர் கதறி கூச்சலிட்டபடி ஆசிரியர்கள் ஓய்வறைக்கு ஓடிச்சென்றார். அங்கிருந்த ஆசிரியர்கள் என்ன நடந்தது? என்று விசாரித்தனர்.
அப்போது வகுப்பறையில் வைத்து மாணவர்கள் தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டதாகவும், தற்போது மீண்டும் நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும் மாணவி தெரிவித்தார். அதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியை சமாதானம் செய்தனர்.
பின்பு அதுபற்றி பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோரும் அறிந்தனர். பள்ளியின் வகுப்பறையில் தங்களின் மகளுக்கு நேர்ந்த இந்த கொடூர செயலால் அதிர்ந்து போன மாணவியின் தந்தை, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகளுக்கு இந்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டிய அவர், மாணவி யிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப் படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரை நிர்வாண வீடியோ எடுத்ததாக கூறப்படும் 7 மாணவர்கள் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
மேலும் மாணவி-மாணவர்களின் பெற்றோர், பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளும் விசா ரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கேரள மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டி ருக்கிறார்.
மேலும் பாதிப்புக்குள்ளான மாணவியின் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவி படித்த பள்ளியின் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 16-ந்தேதி புகார் அளித்தவுடன் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். மேலும் உடனடியாக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்தோம்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளியின் நெறிமுறைக்குழு முடிவு செய்தது. மாணவி விவகாரம் குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் கூறியிருக்கிறது.
பள்ளி வகுப்பறையில் 9-ம் வகுப்பு மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர்களே நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சமூக வலைதளங் களில் பரப்பிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குளிர்பானத்தில் ரப்பர் மரத்துக்கு அடிக்கும் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
- அவரது தாய் மற்றும் மாமா ஆகியோரும் கைதாகினர்.
குமரி-கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் ஷாரோன் ராஜ் (வயது 23), பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரை காதலித்து வந்தார். இவர் குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஷாரோன்ராஜ் தனது நண்பர் ஒருவருடன் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் நண்பர் பெண்ணின் வீட்டுக்கு வெளியே நிற்க, ஷாரோன்ராஜ் மட்டும் வீட்டுக்குள் சென்று விட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.
பின்னர் வெளியே வந்த சிறிது நேரத்தில் ஷாரோன்ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாகவும், தனது காதலி குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் வயிற்றுவலி அதிகமானதால் ஷாரோன்ராஜ் பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை ஜெயராஜன் பாறசாலை போலீசில் கொடுத்த புகாரில், தனது மகனை அவனது காதலியும், பெற்றோரும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என புகார் தெரிவித்திருந்தார்
பின்னர் இந்த வழக்கு கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம் குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ஜான்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
ஷாரோன்ராஜின் காதலி கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். அதன்படி போலீசார் காதலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கிரீஷ்மா, ஷாரோன்ராஜியை காதலித்து வந்தநிலையில் அவரது பெற்றோர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த காதலன் ஷாரோன்ராஜ் அதிர்ச்சி அடைந்து கிரீஷ்மாவிடம் தன்னை ஏமாற்றி விட்டாயே கதறி அழுதுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணத்துக்கு ஒப்பு கொண்டதாக கிரீஷ்மா, ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு இடைஞ்சலாக ஷாரோன்ராஜ் வரலாம் என்ற சந்தேகம் கிரீஷ்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொன்று விடலாம் என்ற கொடூர எண்ணம் அவருக்கு உருவானது. அதன்படி காதலி அவரை வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் ரப்பர் மரத்துக்கு அடிக்கும் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. அதை தொடர்ந்து போலீசார் கிரீஷ்மாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அவரது தாய் மற்றும் மாமா ஆகியோரும் கைதாகினர். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற காதலி கிரிஷ்மா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என்று நெய்யாற்றின் கரை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார்.
- மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு வன்கொடுமையும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். வீராங்கனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்தவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று வரை வீராங்கனையின் காதலன், அவரது நண்பர்கள், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், 18 வயதுக்கும் உட்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 52 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் 6 வழக்குகளில் வீராங்கனை ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது. இந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகு அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
- போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
- தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்த அவரது காதலன், காதலனின் நண்பர்கள் உள்ளிட்ட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். நேற்று முன்தினம் வரை 44 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலையாளப்புழாவை சேர்ந்த அபிஜித் என்ற வாலிபரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 2பேர் வெளிநாட்டில் இருக்கின்றனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்படுகிறது.
விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நோவாவின் தாய்க்கு பிரசவத்தின்போது தொற்று இருந்தது, இது குழந்தைக்கு பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது.
- குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
கொச்சி:
தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெற 9 மாதங்கள் நிறைவு பெற வேண்டும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் எடை பொதுவாக 2.26 கிலோவில் இருந்து 5 கிலோ வரை இருக்கும். 9 மாதங்களுக்கு குறைவான காலத்தில் குழந்தை பிறந்தால் குறைமாத பிரசவமாக கருதப்படும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவே இருக்கும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும். அந்த குழந்தைகளின் எடை அதிகரிக்கவும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது.
இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜோ ஜாய் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து தொடர்ந்து 100 நாட்கள் வைத்து சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக டாக்டர் ரோஜோ ஜாய் கூறுகையில், எந்தவொரு பிறந்த குழந்தைக்கும், உயிர்வாழ்வதற்கு பொதுவாக தாயின் வயிற்றில் குறைந்தது 24 வாரங்கள் வளர்ச்சி தேவைப்படுகிறது. இருப்பினும், 'நோவாவின் விஷயத்தில், குழந்தை உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பே, 23 வாரங்களில் பிறந்தது.
மற்றொரு குறிப்பிடத்தக்க சிக்கல் என்னவென்றால், நோவாவின் தாய்க்கு பிரசவத்தின்போது தொற்று இருந்தது, இது குழந்தைக்கு பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது. கூடுதலாக, குழந்தையின் பிறப்பு எடை வெறும் 350 கிராம் என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே சிகிச்சையை தொடங்கினோம். குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியடையாததால், பிறந்தவுடன் குழந்தைக்கு உடனடியாக செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் பராமரிக்கப்பட்டது. உடல் எடையை அதிகரிக்கும் சிகிச்சையும் வழங்கப்பட்டது.
நோவா இப்போது முழுமையாக ஆரோக்கியமாக உள்ளான். சுயமாக சுவாசிக்கிறான். எனவே தாயுடன் சாதாரண வார்டுக்கு அவன் மாற்றப்பட்டுள்ளான். குழந்தை நோவாவுக்கு எடை அதிகரித்துள்ளது. தற்போது அவனின் எடை 1.850 கிலோ என்ற அளவில் உள்ளது. தாயும், குழந்தையும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் விஷம் குடித்ததாக கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார். அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி காலை பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 12.4 அவுன்ஸ் அதாவது 350 கிராம் மட்டுமே.
எனவே 350 கிராம எடையுடன் பிறந்த நோவா, தெற்கு ஆசியா நாடுகளில் மிகக்குறைவான எடையுடன் பிறந்த முதல் குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளான். இதற்கு முன்பு ஐதராபாத்தில் பிறந்த குழந்தை 375 கிராம் எடையுடன் இருந்தது. அதேபோல் இதே எர்ணாகுளத்தில் பிறந்த மற்றொரு குழந்தை 380 கிராம் எடையுடன் இருந்தது. டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் அந்த குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.
- அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்த அதிர்ச்சி தகவலை அந்த மாணவி, தான் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட கவுன்சிலிங்கில் தெரிவித்தார். அவர் 13 வயதில் இருந்து, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். யார் யாரெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்? என்று வீராங்கனையிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். மேலும் தன்னை சீரழித்தவர்களில் பலரது பெயர் விவரங்களையும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 62 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
வீராங்கனையை சீரழித்தவர்களில் அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், உடன் படிக்கும் மாணவர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் வீராங்கனையின் காதலன் உள்பட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
பள்ளி படிக்கும் வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையிடம் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் அடூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் பற்றிய விவரங்களை விளையாட்டு வீராங்கனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பத்தினம் திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் டி.ஐ.ஜி. அஜீதா பேகம் தெரிவித்துள்ளார்.
- திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
- அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நேரடியாக சென்று மகரஜோதி தரிசனத்தை ரசித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது.
மகர விளக்கு பூஜை கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கியது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மாலை சபரிமலையை வந்தடைந்த திருவாபரணபெட்டியில் இருந்த திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க கண்டுகளித்தனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நேரடியாக சென்று மகரஜோதி தரிசனத்தை ரசித்தார்.
- சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம்.
- என் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
செழிப்பையும், பெரும்வளத்தையும், முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்துவது கூட்டுழைப்பும் ஒற்றுமையுமே என்று அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம். என் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.
இவ்வாறு பினராயி விஜய் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
- பினராயி விஜயன் கட்சி ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.
- சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பினராயி விஜயன் கட்சி ஆதரவுடன் சுயேட்சை எம்.எல்.ஏ.-வாக தேர்வான பி.வி. அன்வர் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இன்று நீலாம்பூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் ஏ.என். ஷாம்சீரை, சட்டமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனத் தெரிவித்த பி.வி. அன்வர், காங்கிரஸ் தலைமையிலான UDF-க்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயனுக்கு எதிராக போராடுவேன் எனத் தெரிவித்துள்ள பி.வி. அன்வர், காங்கிரஸ் தலைவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தினரை சேர்ந்த வேட்பாளரான நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை மலப்புரம் டிசிசி தலைவர் வி.எஸ். ஜாயை (கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்) நிறுத்த வேண்டும். அவர் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் யானை மிதித்து பழங்குடியின நபர் ஒருவர் உயிரிழந்ததற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது வனத்துறை அலுவலகம் சூறையாடப்பட்டது. அதற்கான பி.வி. அன்வர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது.
- விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். உடல்நலம் பாதித்தது போல் சோர்வாக இருந்த அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
அப்போது தனது 13 வயதில் இருந்து, பலரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலை மாணவி தெரிவித்தார். மாணவியின் இந்த புகார் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் பத்தினம் திட்டா மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய மாணவி, தன்னை சீரழித்தவர்களின் பெயர் விவரங்களையும் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 64 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 20 பேரை உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன், அவரது நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் என பலரும் இருந்தனர்.
காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர்கள் மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மாணவி சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் பல புதிய தகவல்களை தெரிவித்தபடி உள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பள்ளி மாணவி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணைய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பலரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு வரும் விவகாரம் பரபரப்பை அதிகரித்தபடி இருக்கிறது.
இந்தநிலையில் பள்ளி மாணவியை பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தங்களின் விசாரணையை உடனடியாக தொடங்கினர். அவர்களின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






