என் மலர்
இந்தியா

புதிய சட்டதிருத்தத்தின் கீழ் வக்பு வாரியத்தை அமைக்க கேரளா அரசு முடிவு
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
வக்பு வாரிய சட்டமசோதாவிற்கு கேரளா முதலமைச்சர் பினாரயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிகமான முஸ்லிம் மக்கள் வாழும் கேரளாவில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது .
இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டத்தின்படி, புதிய வக்பு வாரியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை அரசாங்கம் விரைவில் முடிக்கும் என்று கேர்ளா வக்பு அமைச்சர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதன்மூலம் புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியம் அமைக்கப்படவுள்ள முதல் மாநிலமாக கேரளா மாறும் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் வக்பு வாரியத்தில் பதவிக்காலம் கடந்தாண்டு டிசம்பர் 19 அன்று முடிவடைந்தது. பின்னர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






